ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பலியான கரோனா நோயாளி: பெங்களூருவில் அதிர்ச்சி....

பெங்களூருவில் பல மணிநேரம் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் கரோனா நோயாளி வீட்டில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலதலைநகர் பெங்களூரு நகரில் பொம்மனஹள்ளி என்ற பகுதியை சேர்ந்த நபர் கரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகித்து கரோனா பரிசோதனை செய்து கொண்டார்.


இந்நிலையில் கரோனா பாதிப்பு அவருக்கு இருப்பதாக பெங்களூரு மாநகராட்சியால் தொடர்பு கொண்டு உறுதி செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென்று சுவாசக் கோளாறு பிரச்சனை ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர்108 மூலமாக ஆம்புலன்ஸ் பெற முயற்சித்தனர்.


பல மணி நேரமாக முயற்சி செய்தும் அவருக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் இரவு சுமார் 9 மணியளவில் வீட்டில் உயிரிழந்தார் பெங்களூரு நகரில் ஆம்புலன்ஸ் குறைபாடு காரணமாக பலர் அவதிப்பட்டு வருவதாக ஏற்கெனவே புகார் எழுந்துள்ள வந்த நிலையில் தற்பொழுது கரோனா நோயாளி ஒருவர் பல மணிநேரமாகஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் வீட்டிலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.