கல்லூரி மாணவியிடம் தவறாகப் பேசியவர் மீண்டும் பணியமர்த்தப்பட்டது ஏன்; சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கொரோனா தடுப்புப் பணியில் தன்னார்வலராகப் பணியாற்றிய கல்லூரி மாணவியிடம் சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் கமல கண்ணன் ஃபோனில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது.


இதுதொடர்பாக எஸ்பிளனேடு அனைத்து மகளிர் போலீஸார் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியிடம் பேசினர். அவர் அளித்த தகவலின்படி கமல கண்ணன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


இதையடுத்து கமலகண்ணை சென்னை மாநகராட்சி கமிஷனரான பிரகாஷ் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆனால் அவரை தற்போது பணி அமைர்த்தியுள்ளது குறித்து விளக்கமளித்த நகராட்சி ஆணையர், இதுபோன்ற பாலியல் புகார் குறித்து விசாரிக்க கமிட்டி உள்ளது.


அவர்கள் விசாரணை நடத்திய பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காலகட்டத்தில் வேலை பார்க்காதவர்களுக்கு சம்பளம் அளிக்கக்கூடாது எனும் காரணத்திற்காகவே உதவிப் பொறியாளர் கமலக் கண்ணன் மீண்டும் பணி அமர்த்தப்பட்டுள்ளார்.


அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்து தனிக் கமிட்டி விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதுவரை அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்று கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)