தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - அறிய வேண்டிய முக்கிய 10 விஷயங்கள்

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு - அறிய வேண்டிய முக்கிய 10 விஷயங்கள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


எனினும் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.


1,ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (ஆகஸ்ட்


2, ஆகஸ்ட் 9, ஆகஸ்ட் 16, ஆகஸ்ட் 23, ஆகஸ்ட் 30 ) எந்த தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது


3,அனைத்து தொழில்நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.


4,கிராமங்கள், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களில் கலெக்டர் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். மாநகராட்சிகளில் உள்ள கோவில்களுக்கு அனுமதி இல்லை


5,தனிநபர்கள் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து கட்டாயம் இபாஸ் பெற வேண்டும்.


6,பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க தடை தொடர்கிறது அதேபோல், ரயில் சேவைக்கான தடையும் தொடர்கிறது.


7,பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கான தடை தொடரும். எனினும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


8,ஷாப்பிங் மால்களை திறக்க அனுமதி இல்லை. லாட்ஜ், ரிசார்ட்டுகளுக்கும் தடை தொடரும். தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், மது பார்கள் இயங்க தடை. சுற்றுலா தலங்கள், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லவும் அனுமதி இல்லை.


9,அனைத்து வகையான பொது நிகழ்ச்சிகள்,மத , கல்வி, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள், விழாக்களுக்கான தடை தொடரும். ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்கும் அனைத்து வகை பொட்ருட்களையும் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


10,காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையும், மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image