இரட்டை கொலை.. கைதான மேலும் 3 காவலர்கள்..! மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ உட்பட மேலும் 5 போலீசாரில், 3 காவலர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 5 பேரை சிபிசிஐடி ஏற்கெனவே கைது செய்தது. அவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் தனி வீட்டில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை உட்பட மேலும் 14 பேரிடம் நேற்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லதுரை, சமயதுரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய ஐந்து பேருக்கும் தாக்குதலில் பங்கு இருந்தது கண்டறியப்பட்டது.

எனவே அவர்கள் 5 பேரின் பெயர்களையும் கொலை வழக்கில் சேர்த்த சிபிசிஐடி போலீசார், கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அதில் எஸ்.எஸ்.ஐ பால்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவருக்கும் உடல் நல குறைவு இருந்ததால் அவர்களிருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மற்ற 3 காவலர்களும், முதலாவதாக 15 நாட்கள் காவலில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லதுரை, சமயதுரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய ஐந்து பேருக்கும் தாக்குதலில் பங்கு இருந்தது கண்டறியப்பட்டது.

எனவே அவர்கள் 5 பேரின் பெயர்களையும் கொலை வழக்கில் சேர்த்த சிபிசிஐடி போலீசார், கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அதில் எஸ்.எஸ்.ஐ பால்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவருக்கும் உடல் நல குறைவு இருந்ததால் அவர்களிருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மற்ற 3 காவலர்களும், முதலாவதாக 15 நாட்கள் காவலில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.