மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி திங்களன்று ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தளர்வுகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி திங்களன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


கொரோனா பரவலையடுத்து மார்ச் மாதம் 24ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பின்னர் மத்திய அரசு அன்லாக் என்ற ஊரடங்கு தளர்வுகளை கடந்த மாதம் மத்திய அரசு அறிமுகம் செய்தது .இதன் 30 நாள் காலகட்டடம் இம்மாதம் முடிய உள்ள நிலையில் அன்லாக் 2 திட்டத்தை மத்திய அரசு ஆகஸ்ட் மாதத்தில் செயல்படுத்த உள்ளது.


இதில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநில அரசுகளின் கருத்தை அறிய பிரதமர் மோடி 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உள்துறை செயலர் அஜய் பல்லா உள்ளிட்டோரும் கலந்துக் கொள்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவது ஏழாவது முறையாகும்.