திருமழிசை காய்கறி சந்தையில் 2000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், லாரி ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்..

கோயம்பேடு சந்தை திருமழிசையில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 200 கடைகள் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மொத்த வியாபாரிகள் தினந்தோறும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.


மேலும் வாகன நெரிசல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக காய்கறிகளை வாங்க வரும் வாகனங்களை 50, 50 வாகனங்களாக உள்ளே அனுப்பி வருகின்றனர். இதனால் முதல் நாள் மாலை 6 மணிக்கு வரும் வாகனங்கள் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு காய்கறிகளை வாங்கிக் கொண்டு வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.


இதனால் தூக்கம், உடல் பலவீனம் ஏற்படுவதாகவும், வியாபாரமும் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறிய வியாபாரிகள் திருமழிசை சந்தையில் திடீரென வாகனங்களை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் முழு ஊரடங்கால் திருமழிசை சந்தை விடுமுறை அளிக்கப்பட்டு இன்று நள்ளிரவு முதல் மீண்டும் விற்பனை தொடங்கிய நிலையில் இன்று அதிகளவில் வாகனங்கள் வந்ததால் உள்ளே விட தாமதம் ஏற்பட்டதாலும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.


எனவே வழக்கம்போல் இந்த சந்தையை கோயம்பேட்டிற்க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து உள்ளது. இதனால் 1000 கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரிகள் சுமார் 2000-க்கும் மேற்ப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கொரானோ பரவி வரும் சூழலில் 2000 பேர் பேர் ஒரே இடத்தில் கூடியது நோய் தொற்றை ஏற்படுத்தும் அபாயமும் எழுந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!