தேர்வில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை பெரியசேக்காடு குப்பு தெருவைச் சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளியான இவருடைய மகள் பிரீத்தி(வயது 18). இவர், மாதவரம் பால்பண்ணையை அடுத்த தபால் பெட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.. நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரீத்தி, 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்த பிரீத்தி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு