கொரோனாவால் உயிரிழந்த ’108’ உதவியாளர் - நிதி திரட்டி குடும்பத்தினரிடம் வழங்கிய கோவை போலீசார்

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (22) என்பவர், திருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கி அவிநாசி பாளையம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ பணியாளராக பணியாற்றி வந்தார்.


இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஜுன் மாதம் 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி அவர் உயிரிழந்தார்.


இவரது உடல் திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்ட போலீசார் கணேசனின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.


ஆயுதப்படை போலீசார் மற்றும் மாவட்ட போலீசார் இணைந்து சிறிது, சிறிதாக பணம் திரட்டி மொத்தமாக ₹ 1,10,038 சேர்த்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா