ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த மத்திய அரசு நிறுவனம் முன்பு போராட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த மத்திய அரசு நிறுவனம் முன்பு போராட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பகுதியில் செமன் ஸ்டேஷன் என்ற மத்திய அரசு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட காலை மாடுகள் வளர்க்கப்பட்டு, அதில் இருந்து விந்து அணுக்கள் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதில் அலமாதி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று திடீரென ஒப்பந்த அடிப்படையில் புதிய தொழிலாளர்களை வேலைக்கு எடுத்ததாக தெரிகிறது.


இதனால் புதிய ஆட்களை பணியமர்த்துவதற்க்கான பணிகள் நடப்பதால் பழைய ஒப்பந்த தொழிலாளர்களை உள்ளேய அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பத் என்பவர் தலைமையில் மத்திய அரசு நுழைவு வாயில் முன்பு பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்


என்றும் பணி நீக்கம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதை ஏற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)