ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ கே.பழனிக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கடந்த சில வாரங்களாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வந்த அவர், அண்மையில் சென்னை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில், இன்று அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து போரூர் மியாட் மருத்துவமனையில் எம்.எல்.ஏ பழனி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவரது உறவினர்கள், ஓட்டுநர் உட்பட வீட்டில் பணிபுரிபவர்களும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்