மருத்துவர் சீட்டு இல்லாமல் மருந்துக்கடைகளில், காய்ச்சல் மாத்திரை விற்பனை செய்தால் நடவடிக்கை
மருந்தகங்களில் மருத்துவர் சீட்டு இல்லாமல் காய்ச்சல் மாத்திரைகள் விற்கக்கூடாது, மளிகை கடைகள், பெட்டிக்கடைகளில் காய்ச்சல் மாத்திரைகளை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெரு நகர சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் கரோனவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மருந்து விற்பனை செய்யும் கடைகாரர்களின் கூட்டம் கண்காணிப்பு அலுவலர் எம்.எஸ். சண்முகம், தலைமையில் கடந்த 15.06.20 அன்று நடைபெற்றது.
ஆலந்தூர் மண்டலத்தில் சற்று ஏறக்குறைய 300ஆலந்துரர் மருந்து கடைகள் இயங்கி வருகின்றன, அக்கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் மருந்து விற்பனை சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மருந்து கடைகளில் பதிவு பெற்ற மருந்துவ அலுவலரின் சீட்டு இல்லாமல் காய்ச்சல் மாத்திரைகளை (பாராசிட்டமால், குரோசின்) போன்ற வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
காய்ச்சல் மாத்திரை வாங்க வருபவர் பெயர் விவரம் பெற்று தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மளிகை கடைகள் மற்றும் பெட்டி கடைகளில் குரோசின், மெட்டாசின். சாரிடான், அளாசின், விக்ஸ், ஆக்ஷன் 500 போன்ற காய்ச்சல் மாத்திரைகளை பொது மக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறும் கடைகாரர்கள் மீது காவல் துறை மூலம் உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
300ஆலந்துரர் மண்டலத்தில் தினமும் 20 - 24 மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதால் பொது மக்கள் அங்கு வந்து மருத்துவ ஆலோசனை பெற மண்டல கண்காணிப்புகளார் எம்.எஸ். சண்முகம் கேட்டுக் கொண்டார்.