குட்டீஸ்.. இனிமே கதை சொல்ல சொல்லி அப்பா அம்மாவ நச்சு பண்ணாதீங்க..யூட்யூபை கலக்கும் பெட்டைம் ஸ்டோரிஸ்.

சென்னை: குட்டீஸ்களுக்கான அசத்தல் கதைகளுடன் யூட்யூபை கலக்கி வருகிறது ஸ்டோரி டைம் தமிழ் சேனல். நல்லவர்கள் நிறைந்தது இவ்வுலகம் என்ற நம்பிக்கையை குழந்தைகள் மனதில் விதைக்கும் ஒரு முயற்சியாக ரவிஷங்கர் பாலச்சந்திரன் என்பவர் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கியிருக்கிறார்.


திரைப்படங்கள், மற்றும் டிவி தொடர்களால் ஏற்படும் மனச் சிதைவுகளில் இருந்து நமது இளைய தலைமுறையை மீட்டெடுக்கும் ஒரு சிறு முயற்சியாக, நமது முன்னோர்கள் நமக்கு சொன்ன, நாம் அறிந்த நன்னெறிக் கதைகளை அடுத்த தலைமுறைக்கு பகிரும் ஒரு முயற்சியாக இந்த யூட்யூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.


இதில் குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் பொருமையாகவும் நிதானமாகவும் அவ்வளவு அழகாக கதை சொல்லியிருக்கிறார் ரவிஷங்கர் பாலச்சந்திரன். 2 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கதைகள், 6-9, 10- 13 என வயது வாரியாக குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் அசத்தல் கதைகள் அம்சாய் இடம்பெற்றுள்ளன.


விவசாயி குறித்த கதைகள், நல்லொழுக்க கதைகள், ஊக்குவிக்கும் கதைகள், சாகச கதைகள், விலங்குகள் கதைகள், இறை நம்பிக்கை தொடர்பான ககைதள் என ஏராளமான கதைகள் இடம் பெற்றுள்ளனர் கேட்காத பல புதிய கதைகளும் இந்த யூட்யூப் சேனலில் இடம் பெற்றுள்ளது.


தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் என குழந்தைகள் கையில் செல்போனை கொடுக்கும் பெற்றோர்களுக்கும், இரவில் கதைக்கேட்டு நச்சு பண்ணும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இந்த ஸ்டோரி டைம் தமிழ் சேனல் பெரிதும் கை கொடுக்கும் என தெரிகிறது.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image