போலீசார் பதிந்த பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கை நிருபரை நீதிமன்றம் ரிமாண்ட் செய்ய மறுத்து விடுதலை செய்தது

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல இளம்பெண்களை சீரழித்த பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட காசியை பலிகடா ஆக்கி பலரை தப்பவைக்க போலீசார் நாடகம் நடத்தி வருவதாக செய்தி வெளியிட்ட போர் முரசு பத்திரிகை நிருபர் நேற்று 20/5/2020 கைது செய்யப்பட்டார்.


மேலும் போலீஸாரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் குறித்து செய்தி வெளியிட்டதால் கடுமையாக மிரட்ட பட்டதாகவும் கூறப்படுகிறது


இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன் கீழ் தனிப்பிரிவு ஆய்வாளரின் தோழி மூலம் புகாரை பெற்று போர் முரசு பத்திரிக்கை நிருபர் கண்ணன் போர் முரசு பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் போர் முரசு பத்திரிக்கை நிருபர் கண்ணனை கைது செய்து சிறையிலடைக்க உத்தரவு பெற வேண்டி குற்றவியல் நடுவர் முன் நிறுத்தப்பட்டார்


நீதித்துறை நடுவர் பத்திரிகையில் செய்தி வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளதையும் அது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என்பதால் மேற்படி வழக்கு பொய் வழக்கு என்பதையும் தெரிந்து காவல்துறையினரை கண்டித்ததுடன் நீதித்துறை நடுவர் குற்றம் சாட்டப்பட்ட நிருபரை சிறை காவலுக்கு அனுப்ப மறுத்து விடுதலை செய்தார்.


இதனால் பத்திரிக்கையில் செய்திகள் வெளியிடும் பத்திரிக்கை துறையை மிரட்டும் காவல்துறையினர்செயலுக்கு குற்றவியல் நடுவர் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)