அரும்பாக்கத்தில் இளைஞர் ஒருவரை காவலர்கள் இழுத்துச் செல்லும் வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவலர்கள் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. அதில் MMDA பகுதியில் மருந்து வாங்கிச் சென்றவரை போலீசார் வழிமறித்ததாகவும், மாத்திரை அட்டைகளை அவர் காட்டிய பின்னரும் வாய்த்தகராறு ஏற்பட்டு அவரிடம் காவல்துறை அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுகுறித்து விசாரித்ததில் அந்த இளைஞர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஆசாத் நகர், காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த சதாம் உசேன் என்பது தெரிய வந்தது.


இன்று காலை அரும்பாக்கம் பிரதான சாலையில் அவர் வரும்பொழுது வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர், தான் மருந்து வாங்குவதற்காக வந்ததாகக் கூறியுள்ளார்.


உங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலேயே மெடிக்கலில் மருந்து பொருள் வாங்கியிருக்கலாமே என போலீசார் கேட்டதற்கு, அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனவும் தான் செல்வதாகவும் கூறி தனது இருசக்கர வாகனத்தை எடுத்துள்ளார்.


சாலையில் செல்லும் மற்றவர்களையும் நிறுத்துங்கள்; என்னை மட்டும் ஏன் நிறுத்துகிறார்கள் எனக்கூறி அந்த இளைஞர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், சாலையில் செல்பவர்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்தவில்லையென்றால், தான் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கூறி சாலையில் அமர்ந்து உள்ளார்