அழுகிய உடலை அடக்கம் செய்த பெண் காவல் ஆய்வாளர்.வில்லிவாக்கம்

சத்தியவாணிமுத்து நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே ஏழ்மை நிலையில் பிரபாவதி என்ற பெண் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சாலையோரம் பகுதியில் வசித்து வந்தார் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவருக்கு உணவு வழங்கி வந்தனர் இந்நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக அவர் உணவருந்தாமல் உடல் வாடிய நிலையில் இருந்துள்ளார் .


இன்று காலை அப்பகுதியில் சென்ற பெண் ஒருவர் சாலை ஓரம் வசித்து வந்த பிரபாவதி எந்த ஒரு அசைவு இல்லாமலும் கைகால்கள் அழுகிய நிலையில் உள்ளதாக செக்ரேட்டெரியேட் காலனி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் அங்கு சென்ற போலீசார் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து பிரபாவதியை சோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்து இரண்டு நாட்கள் மேலே இருக்கும் என்று தெரியவந்தது


இந்நிலையில் தான் அவர் கை கால்கள் அழுகியதும் தெரியவந்தது இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும் ஒரு சில சமூக ஆர்வலர்களும் அந்த பெண்ணின் பிணத்தை எடுக்க முன்வரவில்லை இதனால் பெண் காவல் ஆய்வாளர் களத்தில் இறங்கி அவர் வண்டியில் வைத்திருந்த புதுத் துணிகளை எடுத்து இறந்த பெண்ணின் உடலுக்கு அணிவித்து உடலை சுத்தம் செய்து ஓட்டேரி சுடுகாடுக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துச் சென்று உடனிருந்து உடலை அடக்கம் செய்தார்


இறந்து அழுகிய நிலையில் இருந்த உடலை தூக்க யாரும் வராத நிலையில் பெண் ஆய்வாளர் ராஜேஸ்வரியே இறந்த பெண்ணின் உடலை தூக்கி அடக்கம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. . ஆய்வாளர் அவர்களின் இந்த மனிதநேய செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)