மணல் கொள்ளையை படம் எடுத்த நிருபர் சாதிக்பாட்சா மீது கொடூர தாக்குதல்-தஞ்சை தமிழ்ப்பித்தன் தலைவர் தமிழ் நாடு நிருபர்கள் சங்கம்.

சில கூலிப்படையை ஏவி தன்னைத் தாக்கியதாகவும். அவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டது புகைப்படம் எடுத்த காரணத்தினாலேயே இச்சம்பவம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது போன்ற அராஜக செயலில் ஈடுபடுபவர்களை சட்ட ரீதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். பத்திரிக்கையாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இதுவரை இல்லை என்பதை இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக காட்டுகிறது.


இதுபோன்று ஒரு சம்பவம் மட்டும் அல்ல இன்று பத்திரிகையாளர்களை தாக்குதல் என்பது தினமும் நடந்து கொண்டிருக்கிற ஒரு சம்பவமாகவே காணப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம் என்பது யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டவே இருக்கிறது என்பதை நாட்டை ஆள்பவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும் அப்போதுதான் அவர்கள் சிறந்த ஆளுமை உள்ளவர்கள் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளப் படுவார்கள். பல கோரிக்கைகள் விடுத்தும் அரசு பத்திரிக்கையாளர்கள் மீது செவிசாய்க்காமல் இருப்பது வருந்ததக்க விஷயமாகும் காணப்படுகிறது.


திரு சாதிக் பாஷா அவர்களது இந்த சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரிய செயல்பாடாகும் இதைநாடு நலம் பெற நாளும் உழைக்கும் ஊடக உலகம் அன்றாடம் ஆளுபவர்களிடம் கை யேந்தி நிற்பது என்ன கொடுமை ? கொலையாளி களுக்கும் கொள்ளைக்காரன் களுக்கும் அரசு துணை போகலாமா ?


ஊடகம் சார்ந்த பணி மிகவும் மோசமடைந்தது என்று பதியவேண்டும் ஏறிய ஏணியை எட்டி உதைக்கும் குமுகாயம் அரசின் ஆட்சி காலம் முடியப் போகிறது பத்திரிகை யாளர்களுக்கு எங்கே பாதுகாப்பு முறைமைகள் சட்டரீதியான பாதுகாப்பு கொடுப்பது யார் ? வாரியம் எப்போது வரும் ? தேனி மாவட்ட காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடக உலகம் கேட்டு கொள்கிறேன் அன்புடன் தஞ்சை தமிழ்ப்பித்தன் தலைவர் தமிழ் நாடு நிருபர்கள் சங்கம். தேனி மாவட்ட பத்திரிகையாளர்களே களம் இறங்கி உதவி செய்ய கேட்டு கொள்கிறேன் நன்றி '