சுடுகாட்டுக்கே சென்று.. கழுத்தை அறுத்து கொண்ட வயதான தம்பதி.. மதுரையை உலுக்கும் சோகம்!!

மதுரை: மகன் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் நேரடியாக சுடுகாட்டுக்கே வந்துவிட்டனர்.. அங்கு கையில் வைத்திருந்த கத்தியை வைத்து இருவரும் கழுத்தை அறுத்து கொண்ட சம்பவம் மதுரையை உலுக்கி உள்ளது.


மேலூர் சொக்கலிங்கபுரம் சுடுகாட்டு பகுதியில், ரோட்டோரம் வயதான தம்பதி உயிருக்கு போராடுவதாகவும், ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்..


ஆனால், கணவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் விசாரணையை துவங்கினர்.. அப்போதுதான், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் - கமலம் தம்பதி என தெரியவந்தது.


இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள்.. இவர்களது மகன் சதீஷ்குமார், பாலிடெக்னிக் ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.. பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்தார் பாண்டியராஜன்..


நல்ல வேலையிலும் சதீஷ்குமார் சேர்ந்தார்.. அங்கு ஆனந்தி என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்நிலையில் மகளின் மாமியார் வீட்டில் கல்யாண சீர் கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர்..


லாக்டவுன் சாக்காக வைத்து கொண்டு மருமகனும் வேலைக்கு போகாமல் இருந்துள்ளார்.. இதனால் தங்கைக்கான சீர் தரும்படி மகனை கேட்டனர் பெற்றோர்.. ஆனால் அதற்கு அவர் மறுத்ததுடன், பெற்றோரையும் மிக மோசமாக திட்டியதாக தெரிகிறது. மனைவி பேச்சை கேட்டு மகன் திட்டியதையும், மகள் மாமியார் வீட்டில் தவிப்பதையும் நினைத்து மனம் உடைந்தனர்..


மகன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று வீட்டில் இருந்து புறப்பட்டு சுடுகாட்டுக்கு வந்தனர்.. கிளம்பி வரும்போது, "வீட்டில் இருந்து எதையும் கொண்டு போகவில்லை என்று என் மகன்கிட்ட சொல்லிவிடுங்கள்" என்று பக்கத்து வீட்டில் சொல்லிவிட்டு வந்தனர்..


சுடுகாட்டு பகுதியில் கழுத்தையும், கையையும் அறுத்துக்கொண்டனர்.. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.