விஜய் கட்சி ஆரம்பிக்க போறாரா.. மதுரையில் ஒரே பரபரப்பு.. எல்லாத்துக்கும் காரணம் இதுதான்...

மதுரை: விஜய் மதுரையில் கட்சி ஏதாவது ஆரம்பிக்க போகிறாரா? என்று தெரியவில்லை.. காரணம் அங்கு மீண்டும் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பான போஸ்டர்கள்தான்!! நடிகர் விஜய் பிறந்த நாள் என்றாலே அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அமர்க்களப்படுத்தி விடுவார்கள்..


அதற்கான போஸ்டர்கள் 10 நாளைக்கு முன்பே களை கட்ட ஆரம்பித்துவிடும். இந்த போஸ்டர்களை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது..சில நேரம் அரசியல் கட்சி தலைவர்களுக்கே கிலியை தந்துவிடும்.. அதுவும் இந்த கலக்கத்தை தருவது மதுரைதான். இப்படித்தான் 2018-ல் மதுரையில் விஜய் பிறந்த நாளையொட்டி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டது..


அதில், ''ஜூன் 22-ல் முடிவு எடுக்கிறார் விஜய். தன் நீண்ட நாள் மௌனத்தை கலைக்கிறார் விஜய்'' என்று ஒரு தலைப்பை போட்டு வைத்துவிட்டனர்.. அதுமட்டுமல்ல, அதற்கு கீழே ''தமிழக மக்கள் மகிழ்ச்சி, என்றும் குறிப்பிட்டிருந்தனர்.. மேலும் விஜய் முன்னால் ஏராளமான மைக்குகள் வைக்கப்பட்டு, பேட்டி தருவதுபோல படம் வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்துதான், அரசியல்வாதிகள் சற்று ஜெர்க் ஆனார்கள்... மேலும் உளவுத்துறையினரும் அதை பற்றி விசாரிக்க தொடங்கிவிட்டதாகக்கூட செய்திகள் அப்போது வெளிவந்தன.. பிறகுதான், ''அரசியல் கட்சி ஆரம்பிக்கிற நிகழ்ச்சி எல்லாம் மதுரையில் இல்லை.. ரசிகர்கள் அளவுக்கு அதிகமான பிரியத்தால் இப்படி செய்தனர் என்று ஒரு விளக்கமும் தரப்பட்டது. அதுபோலவே இப்போதும் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது...


சிவாஜி, கமல், போட்டோவுக்கு பக்கத்தில் விஜய் படம் உள்ளது.. கமலுக்கு அடுத்தப்படியாக திரையுலகின் மூன்றாவது தமிழ் வாரிசு என்றும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. தமிழகத்தை காக்க வரும் தன்னலமற்ற தலைவன், மக்கள் தலைவன் நாளைய முதல்வன் என்றும் வழக்கம்போல் புகழ்ந்து வரிகள் உள்ளன... இந்த போஸ்டரை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதா? அல்லது வெறும் சினிமா கண்ணோட்டத்துடன் பார்ப்பதா என தெரியவில்லை..


காரணம், கமலுக்கு அடுத்தபடியாக விஜய் இருக்கிறார், அதாவது சீன்லயே ரஜினியை காணோம். விஜய் வீட்டில் ரெய்டு நடந்தபோது, சில சலசலப்புகளும் அதிருப்திகளும் எழுந்தன.. ரெய்டு பற்றி பல கட்சி தலைவர்கள் கண்டனம் சொல்லியபோதும் ரஜினி அதைபற்றி வாயே திறக்கவில்லை.. இதனால் ரசிகர்களும் சற்று அப்செட்டில் இருந்தனர்.. ரஜினியா? விஜய்யா? என்று அரசியல் கள ஆய்வுகளும், கணிப்புகளும் சோஷியல் மீடியாவில் நிறைய வலம் வர ஆரம்பித்தன.


ஆனால் இதை பற்றியெல்லாம் விஜய் ஒரு வார்த்தைகூட பேசவில்லை, யாரையும் குறையும் சொல்லவில்லை.. ஆரம்பத்தில் விஜய் - ரஜினியின் நெருக்கம் அனைவரும் அறிந்ததுதான்.. இப்போது அந்த நெருக்கம் எந்த அளவில் உள்ளதைதான் ரசிகர்கள் இப்படி போஸ்டர் அடித்து மறைமுகமாக ஒட்டியுள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது. சினிமாவில்கூட ரஜினி சீனியர்தான்..


ரஜினி வசனத்தை பேசிக்காட்டிதான், தன் அப்பாவிடம் நடிக்கவே அனுமதி கேட்டதாக விஜய் நிறைய முறை பேட்டிகளில் சொல்லி உள்ளார்.. அந்த வகையிலும் ரஜினி பெயர் போஸ்டரில் இல்லை.. ஆக மொத்தம் சிவாஜி, கமல், விஜய் என்று ஒரு புது ரூட்டை பிடித்து அஸ்திவாரத்தை பலமாக போட்டுள்ளனர் ரசிகர்கள்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!