சாத்தான்குளம்.. நிர்வாணமாக நிற்க வைத்து.. ரத்தம் சொட்ட சொட்ட அடித்தனர்.. ஜெயராஜ் மனைவி கதறல்!

தூத்துக்குடி: ரத்தம் சொட்ட சொட்ட அடித்து இழுத்து சென்றனர் போலீசார்.. என் கணவரை நிர்வாணமாக ஜெயிலில் வைத்தனர்.. என் மகனை மூட்டுகளில் கம்பால் அடித்தனர்... போலீசார் அடித்த அடியில் பின்பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியது" என்று கோவில்பட்டி ஜெயிலில் உயிரிழந்த ஜெயராஜ் மனைவி செல்வராணி பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.


சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்.. இவரது மகன் பென்னிக்ஸ்... காமராஜர் சிலை அருகில் செல்போன் கடை வைத்துள்ளனர். கடந்த 19-ம் தேதி, கடையை கூடுதல் நேரமாக திறந்து வைத்திருந்தது தொடர்பாக பிரச்சனை வெடித்துள்ளது. சாத்தான்குளம் எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் 2 பேரும் அங்கு வந்து, கடையை ஏன் இவ்வளவு நேரம் திறந்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.. ஜெயராஜ் வாக்குவாதத்தில் இறங்கியதால், கடுப்பான போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர்..


தந்தை தாக்கப்படுவதை கண்டு மகன் பதறியுள்ளார்.. அதை பற்றி போலீசாரிடம் கேட்டதற்கு, பென்னிக்ஸையும் போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. கோவில்பட்டி தந்தை - மகன் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு கோவில்பட்டி கிளை ஜெயில் அடைக்கப்பட்டனர்.


இதற்கு பிறகுதான் நேற்று முன்தினம் இரவு நெஞ்சுவலிப்பதாகவும் சொன்னதாகவும், பிறகு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றபோது வழியிலேயே பென்னிக்ஸ் உயிரிழந்துவிட்டதாகவும், தொடர்ந்து ஜெயராஜும் மரணமடைந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மர்ம மரணம் இதையடுத்து, வணிகர்கள் ஒருபக்கம், பொதுமக்கள் மறுபக்கம், எதிர்கட்சிகள் இன்னொரு பக்கம் என சேர்ந்து கொந்தளித்து வருகின்றனர்..


அது எப்படி 2 பேரும் அடுத்தடுத்து இறக்க முடியும் என்பதுதான் கேள்வியாக எழுந்துள்ளது. இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜெயராஜ் மனைவி செல்வராணி, தன்னுடைய மகன், கணவன் மர்ம மரணம் குறித்து போலீசில் ஒரு புகார் தந்துள்ளார்.. அதில் அவர் சொல்லி உள்ளதாவது: ஆபாச வார்த்தைகள் "என் கணவரையும், மகனையும் போலீஸ்காரங்க ஆபாசமா திட்டினாங்க.. ரத்தம் சொட்ட சொட்ட அடிச்சிருக்காங்க.. எஸ்ஐ ரகு கணேஷ் நான் யார் தெரியுமா? கொம்பன் என மிரட்டி அடிச்சிருக்கார்..


என் கணவன், மகன் மரணத்துக்கு காரணமான போலீசாரை சஸ்பெண்ட் செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இப்புகார் அளித்துள்ளார் செல்வராணி. செல்வராணி சட்டையை பிடிச்சு அடித்து இழுத்து சென்றுள்ளனர்..


இதை என் மகன் பார்த்துட்டு, "ஏன் என் அப்பாவை இப்படி இழுத்துட்டு போறீங்க"ன்னு கேட்கவும், நீயும் ஸ்டேஷனுக்கு வா என்று சொல்லிவிட்டு போயுள்ளனர். ஸ்டேஷனில் என் கணவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆபாசமாக திட்டி கன்னத்தில் அடித்துள்ளார்... இதனைப் பார்த்த என் மகன், "ஏன் என் அப்பாவை அடிக்கறீங்க" என்று போலீசாரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் பால்துரையிடம் எனது மகனையும் அடிக்க சொல்லியிருக்கிறார். ரத்தம் சொட்ட.. சொட்ட.. இதற்குபிறகுதான், எஸ்ஐ பால்துரையும், போலீசாரும் சேர்ந்து என் மகனை மூட்டுகளில் கம்பால் அடித்தனர். போலீசார் அடித்த அடியில் பின்பகுதி கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனைப் பார்த்த என் கணவர், "என் பையனை ஏன் இப்படி போட்டு அடிக்கறீங்க" என்று கேட்டுள்ளார்..


அதற்கு ஸ்ரீதர் என் கணவரையும் அடிக்க சொல்லியிருக்கிறார். எனது கணவரை கம்பால் அடித்து ரத்தம் சொட்டச்சொட்ட லாக் அப்பில் நிர்வாணமாக அடைத்துள்ளனர்... இரவு 11.30 மணிக்கு வந்த எஸ்ஐ ரகு கணேஷ், "நான் யார் தெரியுமா? கொம்பன்" என்று கூறி கெட்ட வார்த்தைகளில் திட்டி அவரும் அடித்துள்ளார். கோவில்பட்டி ஜெயில் இதெல்லாம் தெரிந்து நான் போலீஸ் ஸ்டேஷன் சென்று பார்த்தேன்.. அங்கே எனது கணவரும் மகனும் காயத்துடன் நின்றிருந்தனர்...


2 பேர் மீதும் கேஸ் போட்டிருக்கோம்.. கோர்ட்டில் போய் பார்த்து கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டனர். ஜுன் 21-ம் தேதி என் கணவரையும் மகனையும் சாத்தான்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை ஜெயிலில் அடைத்தனர்... இதையடுத்து நேற்று முன்தினம் இரவு எனது கணவர் ஜெயராஜ் இறந்துவிட்டார் என செய்தி வந்தது. இறந்துவிட்டனர் நேற்று காலை 8 மணிக்கு எனது மகன் பென்னிக்ஸ் இறந்துவிட்டான் என செய்தி வந்தது... என் கணவரும் மகனும் சாத்தான்குளம் போலீசார் அடித்துதான் இறந்துள்ளார்கள்...


காட்டுமிராண்டி தனமாக அடித்து கொலை செய்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், பால்துரை, ரகு கணேஷ், காவலர்கள் வேலுமுத்து, ஜேசுராஜ் சாமத்துரை, பாலா, தன்னார்வ தொண்டர்களான கணபதி, கண்ணன், ஜேக்கப், எலிசா மேலும் தொடர்புடைய நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ரத்த கசிவு அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை விசாரணை செய்து நீதி, நிவாரணம் பெற்றுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று செல்வராணி புகாரில் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, பென்னிக்ஸை போலீசார் தாக்கியபோது, அவரது ஆசன வாய் வழியே லத்தியால் குத்தி கொடுமைப்படுத்தியதில் காயம் ஏற்பட்டு ரத்த கசிவும் ஏற்பட்டதாம். எதிர்பார்ப்பு தன்னால் சிறுநீர்கூட கழிக்க முடியவில்லை என்று அங்கிருந்தோரிடம் அழுதிருக்கிறார் பென்னிக்ஸ்.. இந்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. சாத்தான் குளம் மரணத்தை, பச்சை படுகொலை என்றே பொதுமக்கள் பகிரங்கமாக சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.. எனினும் இன்று கோர்ட்டில் இது சம்பந்தமான விசாரணை நடப்பதால், நிச்சயம் 2 பேரின் மரணத்துக்கும் நியாயம் கிடைக்கும் என்றே எதிர்பாரக்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா