முதல் முறை.. இந்திய எல்லையில் படைகளை குவிக்கும் நேபாள ராணுவம்.. ராணுவ தளபதியும் வருகை.

காத்மாண்டு: சர்ச்சைக்குரிய புதிய அரசியல் வரைபடத்திற்கு நேபாள அரசு ஒப்புதலை பெற்ற நிலையில், நேபாளம் இப்போது கலபானிக்கு அருகே ராணுவ முகாமை நிறுவவும், எளிதில் வந்து செல்ல சாலை அமைக்கவும் முடிவு செய்துள்ளது. சீன ராணுவ தலைமை தளபதி, இந்திய எல்லை பகுதி வரை வந்து சென்றுள்ளார்.


இது டெல்லி மற்றும் காத்மாண்டு இடையிலான உறவுகள் மேலும் மோசமடைவதை உறுதி செய்வதாக உள்ளது. நேபாளத்தின் புதிய வரைபடத்தில் கலபானி, லிம்பியாதுரா மற்றும் லிபுலேக் ஆகிய மூன்று இந்திய பகுதிகள் இடம் பெற்றுள்ளன. சுகோய், மிராஜ்.. தயார் நிலையில் அதிநவீன போர் விமானங்கள்..


காஷ்மீரில் விமானப் படை தளபதி திடீர் ஆய்வு ராணுவ நிலைகள் இதுகுறித்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (என்சிபி) முக்கிய தலைவரும், வெளிநாட்டு விவகாரத் துறையின் துணைத் தலைவரும், மத்திய குழுவின் உறுப்பினருமான பிஷ்ணு ரிஜால், கூறுகையில், "நாங்கள் எல்லைக்கு அருகே ஒரு ராணுவ முகாமை நிறுவ உள்ளோம்.


இப்போது நேரடியாக அங்கு சாலை வசதி இல்லை. கலபானிக்கு அருகிலுள்ள சாங்ருவில் BOP (ஆயுத போலீஸ் படையின் எல்லை புறக்காவல் நிலையம்) நிறுவியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். வரைபடத்திற்கு ஒப்புதல் நேபாள நாடாளுமன்றத்தின் மேலவையில், புதிய வரைபடத்திற்கு அனுமதிகிடைத்த அடுத்த நாளே, ராணுவ தளபதி எல்லைக்கு வருகை தந்துள்ளார்.


இந்த வரைபடம் இரு அவைகளிலும் நிறைவேறியதோடு, குடியரசு தலைவர் பித்யா தேவி பண்டாரியும், அதை உடனடியாக அங்கீகரித்தார். நேபாளம் இப்போது ஒரு படி மேலே சென்று எல்லை பிராந்தியத்தில் பாதுகாப்புப் படையினரை நிறுத்த முடிவு செய்துள்ளதால் இந்தியா கோபமடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நேபாள ராணுவ தளபதி சீன ராணுவ தளபதி தாபா புதன்கிழமை-வியாழக்கிழமை டர்ச்சுலாவுக்கு விஜயம் செய்துள்ளார்.


அங்கு நேபாள ஆயுத போலீஸ் புறக்காவல் நிலையத்தை நிறுவியுள்ளது. நேபாள ராணுவத்திற்கும் அருகிலேயே ஒரு தற்காலிக போஸ்ட் உள்ளது. ஜெனரல் தாபாவுடன் நேபாள ஆயுத போலீஸ் படையின் தலைவர் ஷைலேந்திர கானால் இருந்தார். நேபாள எல்லைகளை வலுவாக நிர்வகிப்பதை உறுதி செய்வதற்கான பிரதமர் ஓலியின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த விஜயம் பார்க்கப்படுகிறது.


200 எல்லை புறக்காவல் நிலையங்கள் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரங்களின்படி, 1,800 கி.மீ நீளமுள்ள இந்தோ-நேபாள எல்லையில் அடுத்த ஆண்டுக்குள் குறைந்தது 200 எல்லை புறக்காவல் நிலையங்களை உருவாக்க ஓலி அரசு திட்டமிட்டுள்ளது.


இந்த புறக்காவல் நிலையங்களில் கணிசமான எண்ணிக்கையானது கலபானி பிராந்தியத்திற்கு மிக அருகில் உள்ள சுதூர்பாசிம் மாகாணத்தில் இந்திய எல்லையில் உருவாக்கப்படும். இவ்வாறு இந்திய எல்லையில் ராணுவ நிலைகளை நேபாளம் அமைப்பது இதுதான் முதல் முறை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு