பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரம்.. பிரபல நடிகை மீது திடீர் வழக்குப் பதிவு!

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் பிரபல நடிகை மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையை கொண்ட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.


அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள்தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் போலீசார் விசாரித்தனர்.


அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சுஷாந்துக்கு மன அழுத்தப் பிரச்னை இருந்தது. அவர் அதை வெளியில் சொன்னதே சொல்லவில்லை. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் அடிக்கடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார்.


பலமுறை அப்படி செய்திருக்கிறார். சில வேளை, கதவை பூட்டிக் கொண்டு பல மணிநேரமாக கதறி அழுவார்' என்று அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சுஷாந்தைத் தற்கொலைக்குத் தூண்டியதாக, நடிகை ரியா மீது பீகாரில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர், பீகார் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்த வழக்கை பதிவு செய்துள்ளார்.


இந்த வழக்கு நாளை (24 ஆம்தேதி) விசாரணைக்கு வருகிறது. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை முடிவை எடுப்பதற்கு தூண்டியதாக, கரண் ஜோஹர், சல்மான்கான், சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் மீது பீகார் வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர் பீகார் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இரண்டாவதாக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image