அடுத்த ஷாக்.. அன்வர் சடலத்தை குப்பை வண்டியில் தூக்கி வீசிய அதிகாரிகள்.. உ.பியில்.. வைரலாகும் வீடியோ.லக்னோ: முகம்மது அன்வரின் சடலத்தை அரைகுறையாக கட்டி, அதனை குப்பை வண்டியில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த சம்பவம் போலீசார் முன்னிலையிலேயே நடந்ததுதான் அதைவிட கொடுமை! ஒரு வீடியோ வைரலாகி வருகிறது..


உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது பல்ராம்பூர் என்ற பகுதி.. இது லக்னோவுக்கு 160 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் முகம்மது அன்வர்.. இவருக்கு 42 வயதாகிறது.. அரசு அலுவலகத்துக்கு சென்ற போது இவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார்...


அப்படியே இறந்தும் விட்டார். உடலில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால் இவரது சடலத்துக்கு பக்கத்தில் ஒரு தண்ணீர் பாட்டில் இருந்தது. இவரது சடலம் விழுந்து கிடந்த இடத்திற்கு ஒரு குப்பை வண்டி வருகிறது..


அதில் இருந்த 3 மாநகராட்சி ஊழியர்கள் அன்வரின் சடலத்தை கட்டி, குப்பை வண்டியில் தூக்கி வீசுகிறார்கள்.. அந்த வண்டியின் பின்புறத்தில் அன்வரின் சடலம் போய் விழுகிறது.. இ


தை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். இந்த வீடியோவை அங்கிருந்த ஒருவர் செல்போனில் எடுத்து பதிவிடவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி பரவி வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் சடலத்தை குப்பை வண்டியில் போடும்போது, அங்கேயே 4 போலீஸ்கார்கள் இதனை வேடிக்கை பார்த்து கொண்டுள்ளதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.. இதையடுத்து, 4 மாநகராட்சி ஊழியர்கள் இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அந்த 4 போலீஸ்காரர்கள் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். பல்ராம்பூர் போலீஸ் அதிகாரி, இது ஒரு கொடூர செயல், மனிதநேயமற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.