மும்பைக்கு தாராவின்னா.. சென்னைக்கு கண்ணகி நகர்.. விழி விரிய வைத்த அதிசயம்.. ஒரு சபாஷ் கதை!.

சென்னை: மிகப்பெரிய அதிசயத்தை நிகழ்த்தி உள்ளன நாட்டின் 2 குடிசைப்பகுதிகள்.. தொற்றை வீழ்த்தி மாநகராட்சிகளுக்கும், மாநகரங்களுக்கும், மும்பையின் தாராவியும், சென்னையின் கண்ணகி நகரும் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளன.


ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி தாராவி.. மிகவும் நெருக்கமான பகுதி.. நெரிசலான மும்பையின் மையத்தில் உள்ளது இந்த தாராவி.. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வசித்து வருகின்றனர்.. இவர்களில் நிறைய பேர் கல்வி அறிவு பெற்றிருந்தாலும், கூலி தொழில்தான் பிரதானம். எந்த தொற்று ஏற்பட்டாலும் அது கட்டாயம் தாராவியை தொட்டுவிட்டுதான் அடுத்து செல்லும்.. அதனாலேயே ஏராளமானோர் இங்கு இறந்து போன வரலாறுகளும் உண்டு.


தாராவி அந்த வகையில் இந்த கொரோனாவும் தாராவியை பாதித்தது.. நெரிசல் மிக்க பகுதி என்பதால் சமூக விலகல் கேள்விக்குறியானது.. இங்கு பொதுக்கழிப்பறை நிறைய பயன்படுத்துவதாக சொல்கிறார்கள்.. கிட்டத்தட்ட 600 பேருக்கு ஒரே பாத்ரூம்தானாம்.. இந்த பொதுக்கழிப்பறை மூலமாகவும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக கருதப்பட்டது.


உத்தரவு மகாராஷ்டிராவில் கொரோனா பரவ தொடங்கியது என்றதுமே அரசு முதலில் கவனம் செலுத்தியது தாராவியில்தான். அதனால்தான் பலி எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.. 55 வயதான நபர் ஒருவர் முதல் பலி என்றதுமே அடுத்து 5 பேர் உயிரிழந்துவிட்டனர்.. உடனே சுதாரித்தது அரசு... 2 மாதத்துக்கு முன்பேயே மெடிக்கல்ஷாப் தவிர மற்ற எல்லா கடைகளையும் மூட உத்தரவிட்டது.


பொதுகழிப்பிடம் 425 பொது கழிப்பிடங்கள் கிளீன் செய்யப்பட்டது.. 350 தனியார் ஆஸ்பத்திரிகள் பயிற்சி மையங்கள் களமிறக்கட்டது. ஒவ்வொரு குடிசை வீட்டிலும் பரிசோதனை நடத்தப்பட்டது.. மக்களின் உடல் வெப்பம், ஆக்சிஜன் அளவு கண்டறியும் டெஸ்ட் எடுக்கப்பட்டது.. தொற்று இல்லாதவர்கள், தொற்று இருப்பவர்கள் என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பிரத்யேகமாக கவனிக்கப்பட்டனர்.. உரிய திட்டமிடல்கள் கையில் எடுக்கப்பட்டது..


அதிலும் ரம்ஜான் நோன்பு காலத்தில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இஸ்லாமியர்களுக்கு உணவு, பழம் தரப்பட்டது.. அனைத்து தரப்பு மக்களும் அரசின் நடவடிக்கைக்கு கட்டுப்பட்டார்கள். அதனால்தான் 80 சதவிகித மக்கள் பொது டாய்லட்டை பயன்படுத்தியும், இன்று இந்த ஸ்லம் பகுதியில் தொற்று ஒழிந்திருக்கிறது! கண்ணகி நகர் இதேபோலதான் சென்னையில் உள்ள கண்ணகி நகரும்.. துரைப்பாக்கம் அடுத்துள்ளதுதான் இந்த குடிசை மாற்று வாரிய பகுதியான கண்ணகி நகர்... முதன்முதலில் கண்ணகி நகரில் ஒரு கர்ப்பிணிக்கு தொற்று பரவியது.. பிறகு அடுத்தடுத்து 23 பேருக்கு கொரோனா உறுதியானதுமே மொத்த குடியிருப்புவாசிகளுக்கும் கலக்கம் ஏற்பட்டது.


கூவம், அடையாறு கரையோரம் வசித்து வரும் இந்த பல்லாயிரக்கணக்கானோரின் சுகாதாரத்தை பேணுவது என்பது சிக்கலான அதே சமயம் சவாலான காரியமாக பார்க்கப்பட்டது. அச்சம் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இங்கு வசிக்கிறார்கள்... அதிகம் நெருக்கடி மிகுந்த இடம்.. சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத சூழல்.. எடுத்த எடுப்பிலேயே 23 பேர் என்றால் எப்படியும் பலருக்கும் பரவும் என்று அச்சம் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம், கோயம்பேடு சந்தை... ஆனால் கண்ணகி நகரோ பெரும் சவாலில் இறங்கியது...


அரசு அதிகாரிகளும் தன்னார்வ அமைப்பினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மாஸ்க் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு தேவையான சாப்பாடு முதல் எல்லா பொருட்களும் வீடுகளுக்கே சென்று தரப்பட்டன.. மாஸ்க் அணிவது முதல் கையை கழுவுவது வதை அட்வைஸ்கள் தந்து கொண்டே இருந்தனர்.. தினமும் கிருமிநாசினி சப்ளை செய்யப்பட்டு கொண்டே இருந்தது..


ஏற்கனவே பயத்தில் இருந்த கண்ணகி நகர் மக்கள், அதிகாரிகளின் சொல்லுக்கு கட்டுப்பட்டனர்.. முழு ஒத்துழைப்பு தந்தனர்.. அதனால்தான் தொற்று குறைந்துள்ளது. வூஹான்? தாராவி, கண்ணகி நகர் = இவை இரண்டுமே ஸ்லம் ஏரியாக்கள்தான்... மகாராஷ்டிராவின் வூஹானாக தாராவி மாறிவிடுமோ, சென்னையின் வூஹானாக கண்ணகி நகர் மாறிவிடுமோ என்ற மாயை பயம் உடைத்தெறியப்பட்டுள்ளது..


ஆனாலும் இந்திய அளவில் இதே மஹாராஷ்டிரமும், மாநில அளவில் இதே சென்னையும் தற்போதும் தொற்றில் முதலிடத்தில் உள்ளன.. இவர்களின் மாநிலங்களுக்குள்ளேயே ஒரு அதிசயம் நடந்ததையும், அந்த அதிசயத்தின் சூட்சுமத்தையும் கண்டுபிடித்துவிடுவதே விடுபடுவதற்கு நிரந்தர தீர்வு!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா