வறுமையில் வாடும் நாட்டுப்புற கலைஞர்கள் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . ஊரடங்கும் உத்தரவினால் தமிழரின் பாரம்பரியான கலை,காலாச்சார பாண்பாட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடை பெற வில்லை என்பதால் இந்த தொழிலையை நம்பி இருக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு தொழில் இல்லாமல் அவர்களது குடும்பங்களின் அன்றாட தேவைகளை சமாளிக்க முடியாமல் பொருளாதார நெருக்கடியிலும் வாழ்வாதாரம் பாதிக்கபட்டு வறுமையில் வாடி கொண்டு வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி, இந்த மூன்று மாதங்களில் அதிகமாக திருவிழாக்கள் , கலைநிகழ்ச்சிகள், சுபநிகழ்ச்சிகள் , நடை பெறும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் கொரோனாவினால் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறுத்தபட்ட இந்த நிலையில் கலை நிகழ்ச்சிகளை நம்பி தொழில் நடத்தி வரும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாராம் பாதிக்க பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது . அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி தரும் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பத்தின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சிறப்பு கவணம் செலுத்தி தகுந்த நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது . எனவே : வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ 5000 நிவாரண உதவியாக தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு