போலீசார் அடித்து சித்ரவதை செய்ததால் தென்காசி வீகேபுதூர் வாலிபர் மரணம் : சம்பந்த பட்ட காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . தென்காசி மாவட்டம் , வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த குமரேசன் மீது இடப்பிரச்சனை சம்பந்தமான செந்தில் என்பவர் கொடுக்க பட்ட புகாரின் பேரில் கடந்த மே 8 அன்று போலீசாரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் எச்சரித்து அனுப்பி விட்டார்.


மீண்டும் மே 10 அன்று விசாரணைக்கு குமரேசனை போலீஸ் ஸ்டேசனுக்கு வரச் சொல்லிய காரணத்தால் குமரேசனும் வீகேபுதூர் போலீஸ் ஸ்டேசன் சென்றுள்ளார்.குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற போலீசும் சேர்ந்து மிகவும் கொடூரமாக தாக்கிய உள்ளனர். காவல் துறையினரின் இத்தகை செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது .


ஜீன் 10 ஆம் தேதி குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார் சுரன்டையில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் . ஜீன் 12 அன்று நெல்லை அரசு மருத்துவ கல்லுரியில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு வந்த நிலையில் பதினாறு நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மிகுந்த வேதனை அளிக்கிறது. குமரேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் . மேலும் காவல் துறையினரால் உயிரிழந்துள்ள குமரேசன் குடும்பத்திற்கு தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் இழப்பிடும் அவரது குடும்பத்தில் ஓருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .


இந்த கொரோனா காலத்தில் காவல்துறையின் கடும் தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ், இதே போல் மதுரையில் கறிக்கடை உரிமையாளர் அப்துல் ரஹிம், ஏட்டயா புரம் கணேச மூர்த்தி, குமரேசன், ஆகியோர் காவல் துறையினரால் உயிரிழந்துள்ளார்கள் . மேலும் ஓரு சில காவல் துறையினர் மக்களிடம் காட்டு மிரான்டி தனமாக நடந்து கொள்வதுனால் ஓட்டு மொத்த காவல் துறையினருக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது . இனி வரும் காலங்களில் காவல் துறையினரால் இது போன்று உயிரிழப்பு சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல் துறை தலைவர் D G P திருபாதி அவர்களும் சிறப்பு கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .


எனவே : எந்த வித பாரம் பட்சம் பார்க்காமல் குமரேசன் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து நிரந்த பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் எனவும் . மேலும் குமரேசன் உயிரிழப்பு சம்பந்தமாக மனித உரிமை ஆணையம் தானாக முன் வந்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார் .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா