பிறந்தநாள் கொண்டாடிய திமுக பிரமுகர் : சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்ததால் பரபரப்பு!

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது தோப்பில் 500 - க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் செம்மரக் கடத்தல் தொழில் செய்பவர்களுடன் தனது 50-ஆவது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளார்.


200-க்கும் அதிகமான மதுபாட்டில்கள், பிரியாணி, மட்டன், சிக்கன் எனத் தடபுடலாக நடைபெற்ற அந்த விருந்து கொண்டாட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் வேணுவின் மகன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அ.தி.மு.க. சேர்மன் சிவக்குமார் மற்றும் குணா ஆகியோரும் விருந்தில் கலந்துகொண்டனர்.


இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாடிய குணசேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட ரவுடி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் 15 பேருக்கும் கரோனா தொற்று தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அறிந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கரோனா பயம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. பொது முடக்க காலத்தில் கறி மற்றும் மது விருந்து வைத்து பிறந்த நாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய திமுக துணை சேர்மன் உள்ளிட்ட 50 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது_திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராக இருப்பவர் மாதர்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன். திமுகவில் பொதுக் குழு உறுப்பினராக உள்ளார். கொரோனாவால் கடந்த 19-ஆம் தேதி முதல், முழு பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், 19-ஆம் தேதி தமது 50-வது பிறந்த நாளை மாந்தோப்பு ஒன்றில் 100-க்கும் மேற்பட்டவர்களுடன்குணசேகரன் கொண்டாடியதாக தெரிகிறது_


இதில் திமுக பிரமுகர்கள் அதிகளவில் கலந்து கொண்டதாகவும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 5 அரசு அலுவலர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ஆரம்பாக்கம் காவல் துறையினர் பிறந்த நாள் கொண்டாடிய கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


_தற்போது குணசேகரன் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவருக்கும், அவருடன் இருந்த 15 பேருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட அரசு அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்


தலைமறைவாகியுள்ள குணசேகரன், 6 வருடங்களுக்கு முன்பு செம்மரக்கடத்தல் வழக்கில் சிறைக்குச் சென்றவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்_