சரண்டர் மோடி' ராகுல் காந்தியின் ட்விட்டால் பாஜக கடும் கோபம்.. ட்விட்டரில் டாப் டிரெண்ட்.

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி லடாக் தொடர்பாக சீனர்களிடம் 'சரண்டர்' ஆகிவிட்டார் என்று குற்றம் சாட்டி ட்விட் போட்டிருந்தார். இதற்கு பாஜக தலைமை கடுமையாக கோபத்துடன் பதிலடி கொடுத்துள்ளது . இதனிடையே 'சரண்டர் மோடி' என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டாப் டிரெண்டிங் ஆகி உள்ளது.


அண்மையில் அனைத்து கட்சி கூட்டத்தில் சீனா இந்தியா எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவவில்லை. இங்குள்ள எல்லைகளையும் அவர்கள் கைப்பற்றவில்லை" எனக் தெரிவித்து இருந்தார். இதை கடுமையாக விமர்சித்து இருந்த ராகுல் காந்தி, சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் பகுதியை சீனாவின் தாக்குதலுக்குப் பணிந்து பிரதமர் ஒப்படைத்துவிட்டார்.


அந்தப் பகுதி சீனப் பகுதியாக இருந்தால் : நமது வீரர்கள் ஏன் கொல்லப்பட்டனர்? எந்தப் பகுதியில் அவர்கள் கொல்லப்பட்டனர்?" என்று கேள்வி கேட்டிருந்தார். நரேந்திர மோடி அல்ல சரண்டர் மோடி.. லடாக் கட்டுரையை ஷேர் செய்து ராகுல் காந்தி பகீர் டிவிட்.. பின்னணி தவறான புரிதல் இதுதொடர்பாக விளக்கம் அளித்த பிரதமர் அலுவலகம், ``ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகே யாரும் நம் எல்லைக்குள் ஊடுருவவில்லை என பிரதமர் பேசினார்.


ஆனால், அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது" என விளக்கம் அளித்துள்ளது. சரண்டர் மோடி இந்நிலையில் ஜப்பான் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று ராகுல் காந்தி பகிர்ந்து இருந்தார், அந்தக் கட்டுரையின் கேப்ஷனில் நரேந்திர மோடி உண்மையில் சரண்டர் மோடி" என்று பதிவிட்டிருந்தார். வளைந்து கொடுத்தார் ஜப்பான் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில், பிரதமர் மோடி பல ஆண்டுகளாக சீனாவுக்காக வளைந்துகொடுத்துவிட்டதாகவும், தற்போது இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறியுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.


மேலும் சீனா தொடர்பான அவரது அணுகுமுறையை மாற்ற மோடியின் நடவடிக்கை போதுமானதாக இருக்குமா? என்றும் விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. இதைத்தான் ராகுல் காந்தி ஷேர் செய்து சரண்டர் மோடி என குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர் சரண்டர் என்ற வார்த்தைக்கு Surender என்று எழுத்து பிழையுடன் குறிப்பிட்டிருந்தார். சரணடைதல் வார்த்தை இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்த டுவிட்டர் பாஜக தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.


உடனடியாக பாஜக தலைவர்கள் பலர் எதிவினை ஆற்றி உள்ளனர். பாஜக தலைவர் ஜே.பி.நதா ராகுல் காந்தியின் வார்த்தைகளை ஒரு பாராட்டாக எடுத்துக் கொண்டாலும், மற்றவர்களும் இதைபார்த்து கோபமடைந்தனர். ராகுல் காந்திக்கு "சரணடைதல்" என்ற எழுத்துப்பிழை வார்த்தையை தான் பாஜகவினர் பலர் கேள்வி எழுப்பி இருந்தனர், மேலும் ராகுல் காந்தி வெற்று வார்த்தைஜாலத்தால் கூச்சலிடுபவர என்று பாஜகவினர் விமர்சித்தனர்.


நேரு குடும்ப சிறப்பு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறுகையில் " 'நரேந்திர மோடி சுரேந்தர் மோடி'. அதாவது மோடி-ஜி மனிதர்களின் தலைவர் மட்டுமல்ல, கடவுள்களும் கூட என்று நீங்கள் சொல்கிறீர்கள்". என்று தெரிவித்து இருந்தார். ஆனால் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கடுமையான டுவிட்டரில் விமர்சித்து இருந்தார்.


சரணடைதல் காந்தி-நேரு குடும்பத்தின் தனிச்சிறப்பாகும். 1962 ஆம் ஆண்டில், அசாம் கிட்டத்தட்ட நேருவால் வழங்கப்பட்டது. சீன இராணுவம் பொம்டிலாவைக் கைப்பற்றியபோது, நேரு, "என் இதயம் அசாம் மக்களுக்கு செல்கிறது" என்றார். அவமானம்" என்று பதிவிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு