சென்னை பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சோதனை முயற்சி - எப்படி செயல்படுகிறது

கொரனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளில் டிக்கெட் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்ய உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.


அதனடிப்படையில் சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படும் இரண்டு சிறப்புப் பேருந்துகளில் இந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Gpay, Patym, Phone pay போன்ற டிஜிட்டல் பணப்பரிவர்தனை மேற்கொள்ள பயன்படும் அனைத்து செயலிகள் மூலமாகவும் பயணிகள் டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம்.


நடத்துனர் இருக்கைக்கு மேலே QR CODE SCANNER ஒட்டப்பட்டள்ளது. பயணிகள் பேருந்தில் ஏறியதும் இதனை ஸ்கேன் செய்து தாங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை செலுத்தியவுடன், அங்கிருக்கும் ஒலிபெருக்கியில் CASH ரிசிவ்டு என்று ஒலிக்கும். இந்த டிக்கெட் கட்டணமானது மாநகரப் போக்குவரத்து கழகத்தின் வங்கி கணக்கிற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


முதற்கட்டமாக சென்னையில் இரு பேருந்துகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டம் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்