8 வயது பிஞ்சுவை.. 4 தாத்தாக்கள், 2 சிறுவர்கள் என மொத்தமாக 8 பேர்.. கூண்டோடு கைது.. ஷாக் தரும் குமரி.

கன்னியாகுமரி: 8 வயது சிறுமியை 4 தாத்தாக்கள் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் அட்டூழியம் செய்துள்ளனர்.. அவர்கள் 8 பேரையுமே போலீசார் தூக்கி உள்ளே வைத்தனர். லாக்டவுன் போடப்பட்டவுடன் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்த்தால், அதன் எண்ணிக்கை கூடி கொண்டே தான் போகிறது..


அதிலும் ஊரடங்கை வைத்தே வன்முறைகள் நிகழ்ந்து கொண்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. லாக்டவுனால் சொந்த ஊருக்கு நடந்து சென்ற பெண் பலாத்காரம், லாக்டவுனால் விடுதிகளில் அடைந்து கிடக்கும் இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை என்று கொடூரங்கள் குறையவே இல்லை.


கன்னியாகுமரியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. தேங்காய் பட்டணத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அவர்.. ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியவில்லை.. இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர்.. 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது குடும்பதே வறுமையில் சிக்கி கொண்டுள்ளது..


அதனால் வீட்டில் உள்ள பசி கொடுமையை பொறுக்காமல் 8 வயது சிறுமி அந்த தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று உதவி கேட்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அப்படி உதவி கேட்டு சென்றபோதுதான் சிறுமிக்கு பணம் தருகிறோம் என்று சொல்லி எல்லை மீறி உள்ளனர்..


பண உதவியையும் செய்துவிட்டு, பாலியல் தொல்லையையும் தந்து வந்திருக்கிறார்கள்.. மொத்தம் 8 பேர் சிறுமியை இவ்வாறு சீரழித்துள்ளனர். மனைவியை 4 பேருக்கு விருந்தாக்கிய கணவன்.. மதுவை ஊற்றி.. சிகரெட்டால் சூடுவைத்து.. ரோட்டில் வீசிய அவலம் நடந்த சம்பவத்தை வீட்டில் தன் அப்பாவிடம் அழுதபடியே சொல்லவும்தான் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்..


பிறகு சிறுமியை ஒரு ஆடியோவில் பேச வைத்து அதை ஆதாரமாக தந்து நடவடிக்கை எடுக்க சொல்லி உள்ளார். அந்த 8 பேரில் 4 பேர் தாத்தாக்கள்.. 75 வயதான முகமது நூகு, 52 வயதான சகாயதாசன் , 53 வயதான ஜாகீர் உசேன், 66 வயதான அப்துல் ஜாபர் ஆவார்கள்.. இதில் மற்றொரு கொடுமையும் உள்ளது.. 8 பேரில் 2 பேர் 15 வயது சிறுவர்களாம்.. 8 பேரையும் கைது செய்த போலீசார் 2 சிறுவர்களை போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். கூண்டோடு தாத்தாக்கள் முதல் சிறுவர்கள் வரை கைதாகி உள்ளது கன்னியாகுமரியில் அதிர்ச்சியை தந்துள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்