முன்னாள் கவுன்சிலர் மற்றும் அரசியல்வாதிகள் மீது தமிழக முதலமைச்சர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சிட்லபாக்கத்தில் பணம் பட்டுவாடா செய்து ஒரே இடத்தில் இருந்து பொது மக்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறார்கள் அதுவும் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அரசியல்வாதிகள் முன் நடக்கிறது..


டி என் பி டி எஸ்(TNPDS) அதிகாரிகள் வந்து இதை நிறுத்தி விட்டார்கள்.. தமிழக முதலமைச்சர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்... ரேஷன் கடை ஊழியர்கள் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மீறி ஒரு வீட்டீல் உட்கார்ந்தபடி பணம் தர ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் கௌன்சிலர்கள் என்று சொல்லி கொண்டு கூட்டத்தில் ஏகவசனம் பேசிக்கொண்டு பொதுமக்களைக் கூட்டி அதிகாரம் செய்துகொண்டிருந்த நேரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் கூட்டத்தை கலைக்குமாறு கூறியும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் நின்றிருந்தனர்.


பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் TNPDS அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்கள் கூடியதை பார்த்து ஊழியர்களை எச்சரித்துள்ளனர் அதோடு நில்லாமல் கட்சி காரர்களுக்கு என்ன வேலை என்றும் கடிந்து கொண்டார். பின்னர் ஊழியர்கள் பின்புறம் சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு பட்டுவாடா செய்தனர்.