நாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கை விட கொடூரமானது சாத்தான்குளம் வழக்கு என்று ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற மார்க்கண்டே கட்ஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பெனிக்ஸ், போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்த விவகாரம் தற்போது தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவர்களை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.


சாத்தான்குளம் சம்பவத்திற்கு நீதி கேட்டு ட்விட்டரில் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ நிர்பயா வழக்கை விட சாத்தான்குளம் விவகாரம் கொடூரமானது என்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நிர்பயா வழக்கில் அந்த இளம்பெண் எப்படி சித்ரவதை செய்யப்பட்டரோ அதேப் போன்ற சித்ரவதையை இவர்களும் அனுபவித்துள்ளார்கள்.


நிர்பயா பிறப்பு உறுப்பில் இரும்புராடு கொண்டு தாக்கப்பட்டது போல் இவர்களும் அதுபோன்ற சித்ரவதையை அனுபவித்துள்ளனர். ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்றால் அது தனிப்பட்ட நபர்களால் நிகழ்த்தப்பட்டது. ஆனால் இது சட்டத்தை நிலை நிறுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் நிகழ்ந்துள்ளது.


2011-ம் ஆண்டு போலி என்கவுண்டரில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்ட போது காவலர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றனம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை நீதிமன்றம் நன்கு கவனித்து, அரிதான ஒன்றாக அணுகியது. காவல்துறையினர் சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய நபர்கள். எங்கள் கருத்துப்படி குற்றங்கள் சாதாரண மக்களால் செய்யப்பட்டால், சாதாரண தண்டைனை வழங்கப்பட வேண்டும்.


ஆனால் காவல்துறையினர் குற்றம் செய்தாலோ, அதிகாரத்தை துஷ்பிரோயகம் செய்தாலோ மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.எனவே நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இந்த வழக்கில் காவல்துறையினர் குற்றவாளிகளாக இருந்தால் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும். குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட் மட்டும் செய்யப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது“ என்றுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)