கணவர்களுக்கு தெரியாமல் களியாட்டம்.. மறைவிடங்களில் கசமுசா.. பெண்களை டார்கெட் செய்யும் கும்பல்..!

ராமநாதபுரம்: புருஷன்களுக்கு தெரியாமல் காம களியாட்டம் போடும் பெண்களை ஒரு கும்பல் டார்கட் செய்து வந்துள்ளது..


மறைவிடங்களில், புதர்களில், இருட்டு பகுதிகளில், கள்ளக்காதலர்களுடன் இந்த பெண்கள் கசமுசா, எல்லைமீறும் ஆபாசங்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து, அந்த பெண்களை மிரட்டியும் சீரழித்தும் வந்துள்ளது..


பொள்ளாச்சி சம்பவம், நாகர்கோவில் காசியை மிஞ்சிய இந்த அக்கிரம செயல் ராமநாதபுரத்தில் நடந்துள்ளது! ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியை அடுத்துள்ள வீரவனூரை சேர்ந்த பெண் அவர்..


25 வயசாகிறது. கல்யாணம் ஆகிவிட்டது. ஆனாலும் தன் அத்தை மகனுடன் உறவு இருந்திருக்கிறது.


இந்நிலையில், அத்தை மகனுடன் இந்த பெண் ஸ்கூட்டியில், பூவிளத்தூர் ரோட்டில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.


அப்போது 6 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை சுற்றி வளைத்து கொண்டது.. "புருஷன் இருக்கும்போது, இன்னொரு ஆளா? இந்த வீடியோவை உன் புருஷன்கிட்ட காட்டட்டுமா" என்று சொல்லி மிரட்டியது.


பிறகு அந்த பெண்ணையும் கடத்தி சென்று, அவரிடமிருந்த நகை, பணத்தை பறித்துக்கொண்டு, ஏடிஎம்மில் இருந்த 5 ஆயிரத்தையும் எடுத்துகொண்டு, அதன்பிறகு நடுரோட்டில் பெண்ணை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் வீட்டில் சொல்ல, உறவினர் மூலமாக இந்த புகாரின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, மிரட்டி கொள்ளை அடித்த நபர்கள் யார் என்ற தேடுதல் வேட்டை ஆரம்பமானது..


முகமது, இளஞ்செழியன், சேதுபாண்டி, தனசேகரன், காளிதாஸ், விஷ்ணு என்ற 6 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து நகை, பணம், செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.


அவர்களின் செல்போன்களில் ஏகப்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்..


எல்லாமே அந்தரங்க வீடியோக்கள்தான்.. வீட்டுக்கு தெரியாமல் காதலனுடன் தனிமையில் இருக்கும் பெண்கள். கல்யாணம் ஆகியும் வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருக்கும் பெண்கள், கணவர் வெளிநாட்டில் இருந்தால், வேறு ஆண் நண்பர்களுடன் பழகும் பெண்கள், என அவர்கள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள்தான் அதில் இருந்தன.


இந்த மாதிரி பெண்களையே குறி வைத்து இந்த கும்பல் பின்தொடந்து, வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டி சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது..


இதில் டைவர்ஸ் ஆன பெண்கள், கணவனை இழந்த இளம் விதவைகள் என்றால் இந்த கொள்ளை கும்பல் கூட்டு பலாத்காரமும் செய்துவிடுமாம்.


பல பெண்களின் போட்டோக்களை அசிங்கமாக மார்ப் செய்து வைத்துள்ளனர்..


சில பெண்களை கடத்தி அரைநிர்வாணமாக போட்டோ எடுத்தும் வைத்துள்ளனர்.


இந்த கொடூர கும்பல், பரமக்குடி பகுதியில், மயில் வேட்டையாடுமாம்.. காட்டு பகுதிகளில் கஞ்சா, தண்ணி அடித்து ஆட்டம் போட்டு வந்துள்ளது..


இதுவரை எத்தனை பெண்களை இவர்கள் நாசம் செய்துள்ளனர் என்று தெரியவில்லை..


தொடர் விசாரணை நடக்கிறது. இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாராக இருந்தாலும் தைரியமாக, துணிந்து முன்வந்து புகார் தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.. அவர்களின் தனிநபர் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் நம்பிக்கை தரப்பட்டுள்ளது..


கைதான நபர்களிடம் நம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை