ஒரு வாரத்தில் 61 ஆயிரம் பேர் பாதிப்பு; மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பதை கைவிடுங்கள்: மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை

உலகளவில் கரோனாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தை இந்தியா பிடித்துள்ள நிலையில் அடுத்த வார்திலிருந்து வழிபாட்டு தலங்கள், மால்கள் திறக்கப்பட்டால் கரோனா தொற்று பரவல் இன்னும் வேகமாக அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 61 ஆயிரம் பேர் பாதி்க்கப்பட்டுள்ளனர்,


இதே சூழல் நீடித்தால் மீண்டும் லாக்டவுன்கூட கொண்டுவரலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் கரோனாவால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இத்தாலியை பின்னுக்குத் தள்ளி இந்தியா 6-வது இடத்தைப் பிடித்தது. இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 9 ஆயிரத்து 887 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 294 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஒட்டுமொத்தமாக இந்தியாவில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து 8 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், 3 நாட்களாக 9 ஆயிரத்துக்கு அதிகமாகவும் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் , பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகளில் கரோனோ தொற்று அதிகரித்தபின் போடப்பட்ட லாக்டவுனால் நோய் பரவல் குறைந்து, கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை புள்ளிவிவரங்கள் மூலம் அறிய முடிகிறது.


இதுதொடர்பான வரைபடத்தைக்கூட காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ட்வி்ட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ஆனால் இந்தியாவி்ல் லாக்டவுன் கொண்டு வந்த காலத்திலிருந்து 4-வது கட்டம் வரை சீரான வேகத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது முதல்கட்ட லாக்டவுன் மார்ச் 25 முதல் 21 நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் 10 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டனர். 2-வது கட்ட லாக்டவுன் ஏப்ரல் 15 முதல் 19 நாட்கள் மே 3-ம் தேதிவரை இருந்தது. இந்த காலகட்டத்தில் 31 ஆயிரத்து 094 பேர் பாதிக்கப்பட்டனர். 3-வது கட்ட லாக்டவுன் 14 நாட்கள் இருந்து மே 17-ம் தேதி வரை இருந்தது. இந்த காலகட்டத்தில் 53ஆயிரத்து 636 பேர் பாதிக்கப்பட்டார்கள்.


. 4-வது கட்ட லாக்டவுன் கடந்த 31-ம் தேதி முடிந்தது, அந்த 4-வது கட்டத்தில் மட்டும் 85 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டனர். மே 22-ம்தேதி வரை நாட்டில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்(1,18,447 +47,352.= 1,65,799)கடந்த ெவள்ளிக்கிழமை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 799ஆக அதிகரித்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் 47 ஆயிரத்து 352 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஆக கடந்த ஒருவாரத்தில் மட்டும் 60 ஆயிரத்து 971 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதால் எண்ணிக்கை 2,26,770 ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோயாளிகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து டெல்லி போர்டிஸ் மருத்துவமனையின் தொற்று நோய் தடுப்பு வல்லுநர் மருத்துவர் விகாஸ் மவுரியா கூறுகையில் “ லாக்டவுன் எப்போதெல்லாம் தளர்த்துகிறோம் அப்போது கரோன பரவல் அதிகரிக்கும்.


லாக்டவுன் என்பது நோய் தொற்றை நிறுத்திவைக்கும் ஒரு கருவிதான். லாக்டவுனை படிப்படியாக அவசரப்படாமல் தளர்த்த வேண்டும். சூழல் நமது கட்டுப்பாட்டை மீறிச்செல்லாமல் கவனமாக தளர்த்த வேண்டும். அவ்வாறு கைமீறிப்போனால் லாக்டவுனை மீண்டும் கொண்டுவர வேண்டியது இருக்கும்” எனத் தெரிவித்தார் டெல்லி கங்காராம் மருத்துவமனையின் நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் அரவி்ந்த் குமார் கூறுகையில் “ வழிபாட்டுத் தலங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை திறக்க அவசரம் காட்ட வேண்டிதில்லை.


கரோனா பரவல் அதிகரித்து வரும்போது அதை செயல்படுத்துவதை தவிர்க்கலாம். ஒருவேளை நோய் தொற்று அதிகரித்து கைமீறிச்சென்றால் மீண்டும் லாக்டவுன் கொண்டுவர வேண்டியது இருக்கும்” எனத் தெரிவித்தார் போர்டிஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் விவேக் நாங்கியா கூறுகையில் “ வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு மக்கள் செல்லத் தொடங்கினால், மாலுக்கு செல்லத்தொடங்கினால் கரோனா வேகம் அதிகமாக இருக்கும், சூழலை கைமீறிச்செல்லும். நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்