சென்னை காவல் துறையில் இதுவரை 401 பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரில் 140 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர்.


கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்களான காவல் துறையினரும் பெருமளவு வைரஸ் தொற்றால் பாதிக்கபட்டுள்ளனர்.


சென்னை காவல் துறையில் ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை 401 பேர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ள சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், அவர்களில் 140 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியிருப்பதாக தெரிவித்துள்ளார்.


பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அறிகுறிகள் இல்லாமல் இருப்பதால், ஐஐடி வளாகத்தில் தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பாதிப்பு அதிகமாக இருந்தாலும் 140 பேர் குணமடைந்து பணியை தொடர்வது பாதிக்கப்பட்டுள்ள காவல் துறையினருக்கும், களத்தில் உள்ள காவல்துறையினருக்கும் உத்வேகத்தை கொடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.