சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்.. வீடு தேடி வரும் ரூ.1000 நிவாரணம்..!

சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் வீடுகளுக்கே நேரில் சென்று ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 19-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை இந்த 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதனை அடுத்து இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணமாக, அரிசி கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.


இந்த தொகை இன்று முதல் சம்மந்தப்பட்ட ரேசன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது. வருகிற 26ந்தேதி வரை ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி நடைபெற உள்ளது.