கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை; கடும் நடவடிக்கை எடுங்க...! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று எந்த பகுதியையும் அதிகம் பாதிக்காத வகையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய குறிப்பிட்ட பகுதிகளில் முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இயங்குகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது; கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய குறிப்பிட்ட பகுதிகளில் முகாம்களை நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் மற்றும் கரோனா எந்தப் பகுதியையும் பாதிக்காதவாறு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image