அமெரிக்காவில் முதியவரை தரையில் தள்ளிவிட்ட 2 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

அமெரிக்காவில் 75 வயது முதியவரை தரையில் தள்ளி விட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


காவல்துறையினரால் கொல்லப்பட்ட கறுப்பின இளைஞர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்தைக் கண்டித்து பஃபல்லோ நகரில் போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்தின் முடிவில் பொதுமக்கள் கலைந்து சென்ற நிலையில் எதிரில் வந்த 75 வயது முதியவரை போலீசார் இருவர் தள்ளி விட்டனர். எதிர்பாராத அந்த தாக்குதலால் நிலைகுலைந்து தரையில் விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.


கீழே விழுந்து காயமடைந்த முதியவரை கண்டுகொள்ளாமல் போலீசார் அங்கிருந்து நகர்ந்தனர்.


இதுகுறித்த தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த முதியவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்