தென்காசி மாவட்டத்தில் 13 தனிப்பிரிவு போலீசாரை பணியிடமாற்றம்

தமிழகம் முழுவதிலும் உள்ள காவல் துறை தனிப்பிரிவு போலிசார் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக சில அதிகாரிகள் கூறுகின்றனர். அதன் துவக்கமாக தென்காசி மாவட்டத்தில் 13 தனிப்பிரிவு போலீசாரை பணியிடமாற்றம் செய்து அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.


தமிழ்நாடு காவல் துறையை பொறுத்தவரை மொத்தம் 21-விதமான உட்பிரிவுகள் உள்ளன. அவைகளில் அனைத்துமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் கூட தனிப்பிரிவு போலிசாருக்கு (சி.ஐ.டி) கூடுதல் பொறுப்புகள் உள்ளன. இப்பிரிவு போலிசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளவர்கள். மாவட்டந்தோறும் இவர்களுக்கென தனி இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்களும் உண்டு. இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி.இன்ஸ்பெக்டர் என்று பெயர். மேலும் எஸ்.பி., எஸ்.ஐ. மற்றும் எஸ்.பி.போலிஸ் என்று இப்பிரிவினருக்கு தனி அந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது.


மாவட்டத்தில் ஒவ்வொறு காவல் நிலைய எல்லைக்குள் நடக்கும் விஷயங்களை உடனுக்குடன் எஸ்.பி.இன்ஸ்பெக்டருக்கு கொடுக்கப்பட வேண்டும். அவை உடனடியாக எ.ஸ்.பி.க்கும், டி.ஐ.ஜி. மற்றும் ஐஜி லெவல் அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். அதற்கு வசதியாக ஒவ்வொறு காவல் நிலையத்துக்கும் ஒரு எஸ்.பி.போலிசார் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


இவர்கள் ஒரு சம்பவத்தை மூடி மறைத்தால் அது மாநில அதிகாரி லெவலுக்கு தெரியாமலேயே போய்விடும். இந்த பதவி பவரை பல காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் எஸ்.பி.போலிசார் தங்களின் சொந்த வளர்சிக்காக மட்டுமே பயன்படுத்துக் கொள்கிறார்கள். குறிப்பாக சட்ட விரோத காரியங்களை செய்யும் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு சொத்தும் சுகமுமாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டு நடப்புகளை சேகரித்து உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கக்கூடிய சி.ஐ.டி பணிகளை செய்யக்கூடியவர்களையே வேவு பார்க்க கட்டாயத்தில் தமிழக காச்வல் துறைக்கு நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.


பல மாவட்டங்களில் உள்ள இப்பிரிவு அதிகாரிகள் சமூக விரோதிகளுடன் நெருங்கிய கூட்டு வைத்துக் கொண்டு காவல் துறையின் மரியாதையை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பிரிவு போலிசாரின் பின்னணி சொத்து விவரம், அவர்களின் போன் கால்ரெக்கார்ட்ஸ் போன்றவற்றை எடுத்துப் பார்த்தால் எவ்வளவு தவறான சங்கதிகளுக்கு (கட்டப்பஞ்சாயத்து) அரசு பணியை பயன்படுத்துகிறார்கள், மேலும் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய தகவலை எப்படி மறைக்கின்றனர் என்பது தெரியவரும்.


குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உயரதிகாரிகளின் பெயரை தவறாக பயன்படுத்துவதை பல ஸ்டேஷன்களில் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக சி.ஐ.டி. (எஸ்.பி) போலிசாக இருப்பவர்களை பிரிவு மாற்றம் செய்து, தனிப்பிரிவுக்கு புது ரத்தம் பாய்ச்சினால் பல விஷயங்களுக்கு இது நன்மை பயக்கும் புகார்தாரர் உட்பட அனைவரும் பயன்பெறுவர் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள். அதனடிப்படையில் தான் மாநிலம் முழுவது எஸ்.பி.பிரிவு போலிசார் பணியிடமாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!