100 நாள் வேலை திட்டத்தில் மாபெரும் முறைகேடு : தணிக்கை குழு அறிக்கையால் ஆரணியில் பரபரப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே நூறு நாள் வேலை திட்டத்தில் ரூபாய் 10 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை குழு அறிக்கை அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆரணி கிழக்கு மற்றும் ஆரணி மேற்கு ஊராட்சி ஒன்றியங்களில் நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உள்ள 75 கிராம பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி வேலை திட்டம் நடைபெற்று வருகின்றன. பணிதள பொறுப்பாளர்கள் நியமித்து ஏரி தூர்வாரும் பணி, நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், ஏரி மதகு அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்த நிலையில், மேற்கு ஆரணி ஓன்றியத்தில் உள்ள 37 கிராமங்களில், கடந்த மூன்று ஆண்டுகளாக 10 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றிருப்பதாக தணிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


ஆரணியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாட்களுக்கு முறையாக ஊதியம் வழங்காததால் பல திட்ட பணிகள் நிறைவடையாமல் பாதியிலேயே நிற்கின்றன. ஆனால் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது தணிக்கை குழு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. வெளியூர்களில் வசிப்பவர்கள் கூட ஆரணியில் நூறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)