ஸ்டாலின் தலையை கவனிச்சீங்களா.. முடியை பார்த்தீங்களா.. 10 வயசு பொசுக்குன்னு குறைஞ்சிருச்சே!

சென்னை: ஸ்டாலினை கவனிச்சீங்களா.. அவரது தலையை கவனிச்சீங்களா? ஏதாவது வித்தியாசம் தெரியுதா.. ஆமா.. இளமை திரும்பிவிட்டது.. திமுக தலைவர் ஹேன்ட்ஸம் ஆயிட்டார்.. இதுதான் இப்போ ஹாட் நியூஸ். பொதுவாகவே கருணாநிதி குடும்பத்துக்கு என்று ஒரு ஜீன் உள்ளது.


அந்த குடும்ப உறுப்பினர்களுக்கு யாருக்கும் வயசு அவ்வளவாக தெரியாது. இதில் அநியாயம் ஸ்டாலின்தான்... வயசு 67 ஆகிறது. ஆனாலும் இன்னும் யூத்ஃபுல்லாக இருக்கிறார் மனுஷர்!! இவர் 40 வயதை கடந்து நீண்ட காலம் ஆகியும் திமுக இளைஞர் அணி தலைவராகவே இருந்தார்.


அதற்கேற்ற தோற்றமும் அவருக்கு பெரிதும் கைகொடுத்தது. ஆனால் இதெல்லாம் சும்மா வந்து விடவில்லை. உடற்பயிற்சி செய்வதற்காகவே வீட்டில் தனியாக 'ஜிம்' வைத்திருக்கிறார் ஸ்டாலின். நமக்கு நாமே பயணத்தின்போது, திடீரென கலர் கலர் டி- ஷர்ட் போட்டு, வயசு பையன்களின் காதில் புகைச்சலை தந்தவர்..


பிரச்சார நேரங்களில் கலர் டீ-ஷர்ட்டில் வாக்கிங் & ஜாக்கிங்கில் படு யங்காக உருமாறுவார்!! 25 வருஷத்துக்கு முன்பும் ஸ்டாலின் இப்படித்தான் இருந்தார். ஒல்லியான தோற்றத்துடன், முன்பக்க நெற்றியில் கற்றைமுடி புரள, கலர் கலர் சட்டையில் இருப்பார். இப்போதும் அப்படியேதான் இருக்கிறார்.


ஆனால் தலைமுடி மட்டும் கொட்டிவிட்டதுபோல தெரிகிறது. தலைஞாயிறுக்கு வந்த காவிரிக்கு மலர்தூவி வரவேற்பு - 8 ஆண்டுகளுக்குப் பின் குறுவை சாகுபடி பொதுவாக, அளவுக்கு அதிகமாக சுருட்டை இருப்பவர்களுக்கு முடி கொட்டும் என்பது இயற்கை.. அந்த வகையில்தான் ஸ்டாலினுக்கும் கொட்டிவிட்டது. அதனால் புது விக் ஒன்றை வைத்துள்ளார்..


இதை வைத்தபிறகு இன்னும் ஸ்மார்ட் லுக் வந்துவிட்டது.. இப்படி விக் வைப்பது ஒன்றும் தமிழ்நாட்டு தலைவர்களுக்கு புதிது இல்லைதான்.. நம்ம விஜயகாந்த் கூட விக்தான் வைத்திருக்கிறார்.. ராகுல் காந்தி கூட சமீபத்தில் தனது கெட்டப்பை மாற்றி ராஜீவ் காந்தி போல மாறினார்.


ஆனால் இப்படி விக் வைக்க காரணம், இவர்கள் தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக இல்லை.. தங்கள் தொண்டர்களுக்கு ஒரு உற்சாகம், நம்பிக்கை, பூஸ்ட் தருவதற்காகவே போலும்.. இளமையுடன் வலம்வந்தால், உயிருக்குயிரான தொண்டர்களுக்கு அது ஒரு சந்தோஷம்.. அவ்வளவுதான்.. இப்போது ஸ்டாலின் வைத்துள்ள புது விக் தான் திமுக வட்டாரத்தில் பேசப்படும் ஹேப்பி தகவல்.. ஆனால் ஸ்டாலின் அழகாகவே இருக்கிறார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா