இந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து

கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இந்தியாவுக்குள் வந்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கேரளத்தில் ஜனவரி முப்பதாம் நாள் கண்டறியப்பட்டது.


இந்நிலையில் தெலங்கானா மற்றும் பிற மாநிலங்களில் நோயாளிகளிடம் எடுத்த வைரஸ் தொற்றுகளை எம்ஆர்சிஏ என்னும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.


இதில், இந்தக் கொரோனா தொற்று நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்ததை சேர்ந்தது என்று கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


ஜனவரி 30ஆம் தேதிக்கு முன் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்குச் சோதனை மேற்கொள்ளாத காலத்தில் சீனாவில் இருந்து வந்தவர்களுடன் தொற்று வந்திருக்கலாம் எனவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.