கொரோனா சிகிச்சை பயம்: அதிகாரிகளை கண்டு ஓட்டம் பிடித்த கோயம்பேடு கூலித்தொழிலாளர்கள்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைசெய்த கூலி தொழிலாளர்கள் கொரோனா சிகிச்சைக்கு பயந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள எடையாளம், ஆத்தூர், கூடலூர் ஆகிய கிராம பகுதியிலிருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள அங்காடியில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அங்கு கொரோனா தோற்று அதிகரித்து வருவதால் அங்கிருந்து அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பினர்.


இதனிடையே கோயம்பேடு மார்கெட்டில் வேலைசெய்த கூலித் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் இன்று வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் மதுராந்தகம் அருகே உள்ள கூடலூர் கிராமத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்தவர்களை கண்டறிந்து அவர்களுடைய வீடுகளை தனிமைப்படுத்தினர்.


அதேபோல், ஆத்தூர், எடையாளம் கிராமப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்டகூலித் தொழிலாளர்களை தேடிச்சென்ற மருத்துவக் குழுவிடம் அவர்கள் கோய்ம்பேட்டில் வேலை செய்யவில்லை என மறுப்புத் தெரிவித்து ஓட்டம் பிடித்தனர்.


இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விசாரணைக்கு பிறகு இந்த மூன்று கிராமத்திலுள்ள அவர்களுடைய வீடுகளை வருவாய்த்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.


மாவட்ட நிர்வாகம் நாளை மருத்துவ குழு மூலம் அப்பகுதி முழுவதும் உள்ளவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்