வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வெளியே வர வேண்டாம்; வானிலை மையம்

சென்னை: வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் வெளியே வர வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், வெப்பச்சலனம் காரணமாக ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும், இடியுடன் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்றுடன் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.                        


தருமபுரி, சேலம், கரூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாக வாய்ப்புள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் 11:30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வர வேண்டாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்