ரிஸ்க்.. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறப்பா.. தொற்று பரவும் ஆபத்து.. மக்கள் பீதி.

சென்னை: பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. "எப்படியும் பச்சை கலரையும் ரெட் கலராக மாற்றாமல் விட மாட்டார்கள் போல இருக்கிறதே" என்று ஆதங்க குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன!!


கொரோனாவைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மேலும் 2 வாரம் லாக்டவுனை மத்திய அரசு நீட்டித்துள்ளது..


இதற்கான தளர்வுகள், கட்டுப்பாடுகள் குறித்தும் விலாவரியாக அரசு தெளிவுபடுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தது.


அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளர்வுகளில் ஒன்று சலூன் கடைகள் திறப்புதான்.. ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக சலூன் கடைகள் திறக்கப்படவில்லை..


ஆண்கள் கட்டிங், ஷேவிங் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
முடிந்தவரை வீடுகளில் இருப்பவர்கள் இதற்கு உதவினாலும் பெரும்பாலானோர் ஷேவிங் செய்ய முடியாமலும், முடி வெட்ட முடியாமலும் தாடி மீசையை டிரிம் செய்ய முடியாமலும், தலைக்கு டை அடிக்க முடியாமலும் பெரிதும் அவதிக்குள்ளாயினர்...


முடிகள் வளர்ந்து தொங்கியது.. பரட்டை தலையாக பலர் காணப்பட்டனர்.. ஷேவிங் செய்யப்படாமல் புதர்போல தாடி வளர்ந்து காணப்பட்டது.


கோயம்பேட்டில் சலூன் கடை வைத்திருக்கும் ஒருவர், கடையை திறந்து வைத்து கொண்டு கட்டிங், ஷேவிங் என இறங்கிவிட, அவருக்கு தொற்று உறுதியானதும் இந்த இடைப்பட்ட நேரத்தில் நிகழ்ந்தது.. கடைக்கு தினமும் கஸ்டமர்கள் வருவதுடன், குறைந்தது 20 வீடுகளுக்கு சென்றாவது கடை ஓனர் கட்டிங், ஷேவிங் செய்து வந்ததால் உச்சக்கட்ட பீதிக்கு சென்றது கோயம்பேடு!!!


பெரும்பாலான சவரத் தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருகின்றனர். இந்த குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்தனர்.. அரசும் எந்த இவர்களுக்கு எந்த பொருளாதார உதவியையும் செய்யவில்லை..


அதனால் 2 நாளைக்கு முன்பு கூட முடிதிருத்துவோர் நலசங்கத்தினர் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர்.


" சலூன் கடைகளை வாரத்தில் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். மாஸ்க், கிளவுஸ் அணிந்து நாங்கள் பணிபுரிய தயாராக உள்ளோம். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.


இந்நிலையில் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சலூன் கடைகள் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. எனினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை!!


ஒருவேளை இந்த அறிவிப்பு உண்மையானால், இது சவரத்தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி அவர்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்ப உறுப்பினர்களுக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக உள்ளது.. எனினும், இந்த அறிவிப்பு எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம்?


தொற்று பரவல் இல்லாமல் கட்டிங், ஷேவிங் செய்யப்படுமா? இதில் சமூக விலகல் முழுதுமாக கடைப்பிடிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதனால் நிச்சயம் அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டி வரும்...


இப்போது பரபரத்து வெளிவரும் இந்த சலூன் கடை அறிவிப்புக்கு "கடைசியில எல்லாமே சிவப்பாக மாறாமல் விடமாட்டார்கள் போல".. என்ற பொதுமக்களின் பொருமல்கள் இப்போதே எழ ஆரம்பித்துவிட்டன!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்