சுட்டெரிக்கப் போகும் வெயில் - இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்!

ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தின் உச்சமாக அக்னி நட்சத்திரம் இருக்கிறது. சூரியனின் கதிர்கள் நம் மீது 90 டிகிரியில் விழும்.


இதனால் தோல் பிரச்சினை, கோடை கால நோய்கள் உள்ளிட்டவை ஏற்படக்கூடும். மற்ற நாட்களை விட அதிகமான வெப்பம் நிலவும். தமிழகத்தின் சில இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகும்.


எனவே வெயில் வாட்டி வதைக்கும். இதன் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவர்.


இதையொட்டியே பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது.


இதுதொடர்பாகசென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள தகவலின்படி, அக்னி நட்சத்திரம் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும். அதாவது 24 நாட்கள் கத்திரி வெயில் தொடரும்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகப்படியாக வெப்பநிலை பதிவாகும்.


வங்கக்கடலில்ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசும்.


ஆனால் வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யலாம்.


சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். சேலம், தருமபுரி, மதுரை, திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


எனவே பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் வீடுகளிலே முடங்கிக் கிடக்கின்றனர்.


சென்னைவானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி கத்தரி வெயில் காலமான அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று தொடங்குகிறது


Popular posts
நடுரோட்டில் கதறிய பெண் வழக்கறிஞர்-“இன்னும் எவ்வளவு பணம் வேணாலும் வாங்கித்தர்றேன்.. என்னோட வந்துடுங்க!”
Image
600 கோடியை ஏப்பம் விட்ட பாஜகவினர்; கும்பகோணத்தை அதிரவைத்த‘ஹெலிகாப்டர் பிரதர்ஸ்’.12 சொகுசு கார்களை பறிமுதல் செய்து அதிரடி!
Image
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image