மூச்சு விட தவிக்கும் பிஞ்சுகளை தூக்கி கொண்டு ஓடிய பெற்றோர்!! :நாட்டையே கலங்கச் செய்துள்ள விஷவாயு கசிவு ; நெஞ்சை உலுக்கும் வீடியோ

ஹைதராபாத் : கொரோனா ஒரு பக்கம் தனது கோர முகத்தை காட்டி வரும் நிலையில், விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் ஏற்பட்டுள்ள வாயுக்கசிவு மக்களை நிலைகுலைய செய்துள்ளது.


ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது.


இந்த ஆலையில் இருந்து இன்று காலையில் ஸ்டைரீன் என்ற ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது.


அஅழுத்தத்துடன் வெளியேறிய வாயு, ஆலைக்கு வெளியே பல கிலோ மீட்டர் தொலைவுக்கு பரவியது.


இதையடுத்து இந்த வாயுவை சுவாசித்ததால் சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.


இதில் 10 பேர் பலியாகியுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதற்கிடையே குழந்தைகள் பலர் இந்த வாயுக்கசிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.


அதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓடும் காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்துள்ளது.


தங்கள் குழந்தைகளுக்கு என்ன ஆயிற்றோ என பதற்றத்தில், அந்த பெற்றோர் குழந்தைகளை எழுப்ப முயலும் காட்சிகள் நெஞ்சை உலுக்கும் வகையில் உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்