காசில்லாமல் தவிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களிடம் கூடுதல் ரயில் கட்டணமா..தொழிலதிபர்களுக்குக் கடன் தள்ளுபடி; பிஎம் கேர்ஸ் எதற்கு....-எழும் கண்டனங்கள்


புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், யாத்திரிகர்கள், ஆகியோர் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர், இவர்களை சொந்த ஊரில் சேர்ப்பிக்க மத்திய அரசு ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்குகிறது,


இதற்காக சாதாரண படுக்கை வசதி வகுப்பு கட்டணத்தையும் விட கூடுதலாக அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது ரயில்வே போர்டு.


மே 1ம் தேதி முதல் இது அமலுக்கு வந்தது.


மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்பத்தான் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்திருந்த போதிலும் படுக்கை வசதி வகுப்பு கட்டணத்துடன் பயணி ஒருவருக்கு கூடுதலாக ரூ.50 வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்தது.  


 உதாரணமாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ரூ260 கட்டணம், தூரத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும்.


இது குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஏழைத் தொழிலாளர்களிடமிருந்து இந்தக் காலக்கட்டத்தில் பாஜக அரசு கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது என்று ட்வீட் செய்துள்ளார்.


இது தொடர்பாக இந்தி மொழியில் அவர் பதிவிட்ட ட்விட்டரில், “வேலையின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோரிடம் ரயில் கட்டணம் வசூலிப்பது வெட்கக் கேடானது.


பெருமுதலாளிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் கடன் தள்ளுபடி செய்கின்றனர்.


பணம்படைத்தவர்களை ஆதரிக்கின்றனர். ஆனால் ஏழைகளுக்கு எதிராகச் செயல்படுகிறது.


வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் ஏற்கெனவே நெருக்கடியில் இருக்கும் தொழிலாளர்களைச் சுர்ண்டுவார்கள்.


என்.டி.டிவிக்குப் பேசிய ஜார்கண்ட் முதல்வர் சோரென், “அவர்களிடம் போய் ரயில் கட்டணம் வசூலிப்பது தவறு.


மத்திய அரசு இல்லையெனில் மாநில அரசு ஏற்கும், ஆனால் நிச்சயமாக அவர்களைக் கட்டணங்களை சுமக்கச் செய்வது தவறு” என்று கண்டித்தார்.


சத்தீஸ்கர் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் அதே என்.டி.டிவிக்கு கூறும்போது, “பிஎம் கேர்ஸ் எதற்கு இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.


லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி, பணமின்றி, உணவின்றி, புகலிடமின்றி தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு