கேக் காஞ்சு போச்சு.. காதலனும் வரவே இல்லை.. காத்திருந்து நொந்து போன சரண்யா.. எடுத்த ஷாக் முடிவு.

சென்னை: கேக் வெட்ட காதலன் வரவேயில்லை.. காத்திருந்து காத்திருந்து கடுப்பான 23 வயசு சரண்யா ஃபேனில் தூக்கு போட்டு கொண்டார்.. மனம் நொந்து இந்த முடிவை எடுத்த சரண்யா, ஒரு பெண் போலீஸ் ஆவார்!!!


விழுப்புரத்தை சேர்ந்தவர் சரண்யா.. வயது 21.. சென்னை ஓட்டேரி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக வேலை பார்த்து வந்தார்... அயனாவரம் பனந்தோப்பு காலனியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.. தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.


இந்நிலையில், நேற்றுமுன்தினம் சாயங்காலம் டியூட்டி முடிந்து வீட்டுக்கு வந்த சரண்யா, கொஞ்ச நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.. பக்கத்து வீட்டில் வசிக்கும் சக தோழி, சரண்யாவின் சடலம் தூக்கில் தொங்குவதை கண்டு அலறி, ஓட்டேரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசாரும் விரைந்து வந்து சரண்யாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்.


பிறகு எதற்காக சரண்யா தற்கொலை செய்து கொண்டார் என்ற விசாரணையையும் ஆரம்பித்தனர். அப்போதுதான் விவகாரம் வெளியே வந்தது.சரண்யா, 2017-ம் ஆண்டு முதல் தன்னுடன் டிரெயினிங்கில் இருந்த போலீஸ்காரர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.. அவருக்கும் வயது 23தான்.. சென்னையில் உள்ள ஒரு ஸ்டேஷனில் போலீசாக இருக்கிறார்.


நேற்றுமுன்தினம் அந்த போலீஸ்காரருக்கு பிறந்தநாள்.. இதனால் சரண்யா, காதலனுக்காக ஸ்பெஷலாக கேக் வெட்ட ஏற்பாடு செய்தார்.. அதற்காக காதலனை தன் வீட்டிற்கும் வரும்படி சொல்லி இருந்தார்..


வீட்டில் தடபுடல் ஏற்பாடுகளை செய்து, ஒரு பர்த்டே கிப்ட்டையும் வாங்கி வைத்திருந்தார்.


ஆனால் அந்த போலீஸ்காரருக்கும் கொரோனா தடுப்பில் டியூட்டி போட்டு விட்டார்கள்.
அதனால் பணி காரணமாக கேக் வெட்ட தம்மால் வர முடியாது என்று சொல்லி உள்ளதாக தெரிகிறது..


இதை தாங்கி கொள்ள முடியாத சரண்யா, மனம் உடைந்து ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. கேக் வெட்ட காதலன் வராததால் பெண் போலீஸ் உயிரிழந்தது சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.