தனியார் நிதி நிறுவனங்கள் மக்களிடம் கட்டாய படுத்தி பணம் வசூலிப்பதா .. ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .


ஊரடங்கும் உத்தரவினால் வாழ்வாதாராம் பாதிக்க பட்டு வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் ஏழை , மற்றும் நடுத்தர மக்களிடம் போதிய வருமானம் இல்லாமல் அன்றாட குடும்ப செலவுகளுக்கு பணம் இல்லாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் இந்த நிலையில் மக்களிடம் பஜாஜ் பைனாஸ் ,மற்றும் தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களிடம் கட்டாய படுத்தி பணம் வசூலிப்பதும் மிரட்டல் தோனியில் பேசுவதும் இது போன்ற செயல்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது . மேலும் .


பஜாஜ் பைனாஸ் , மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் சார்பாக பொது மக்களுக்கு கொடுத்த பணத்திற்கு வட்டி மேல் வட்டி கேட்டு மிரட்டியும் மாதந்த தோறும் மக்கள் கட்டும் கடன் பணத்தையும் கட்ட சொல்லி தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் கட்டாய படுத்தி வருகிறார்கள் என்கிற செய்திகள் வெளியாகி உள்ளன.


மேலும் ஊரடங்கும் உத்தரவினால் மக்கள் வேலை இல்லாமல் கஷ்ட பட்டு வரும் இந்த நிலையில் மக்களிடையே கட்டாய படுத்தி தனியார் நிதி நிறுவனங்கள் பணம் வசூலிப்பதனால் மக்கள் பெரும் மன உலைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள் .


மேலும் தனியார் நிதி நிறுவனங்கள் மக்களின் கஷ்டத்தை உணர்ந்து ஊரடங்கும் உத்தரவு முழுமையாக தளர்வுக்கு வரும் வரையில் பணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் கேட்டு கொள்கிறோம் . மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மக்களின் நலன் கருதி தனியார் நிதி நிறுவனங்கள் மூன்று மாதம் கட்டணம் வசூலிக்ககூடாது என்று அறிவித்துள்ளார்.


மேலும்முதல்வர் அவர்களின் அறிவிப்புக்கு மதிப்பளிக்காமல் தனியார் நிதி நிறுவனங்கள் பணம் வசூலிக்கும் இத்தகை செயல் கடும் கண்டனத்துக்குறிய செயலாகும் . இந்த ஊரடங்கும் உத்தரவு முழுமையாக தளர்வுக்கு வரும் வரையில் தனியார் நிறுவனங்கள் மக்களிடையே பணம் வசூல் செய்யவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .


எனவே : தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் உத்தரவை மீறி பணம் வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்