கோயம்பேட்டில் இருந்து எத்தனை மாநிலங்களுக்கு, மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரியுமா..

கோயம்பேடு காய்கறி மற்றும் மலர் விற்பனை வளாகம், ஆசியாவின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்று. 1.19 சதுர கி.மீ. பரப்பில் அமைந்துள்ள சந்தையில் 3,590 காய்கறிக்கடைகள் உள்ளன. கோயம்பேடு சந்தை சென்னை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது.


ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து நாளென்றுக்கு 1000-1500 கனரக வாகனங்களில் இங்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. தினமும் சராசரியாக 4000 டன் காய்கறிகள் விற்பனையாகிறது. முக்கிய நாட்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் வரை வந்து செல்லும் இடமாக கோயம்பேடு காய்கறி சந்தை இருந்து வருகிறது.


பல இடங்களில் இருந்து சுமார் 10,000 வியாபாரிகள், தொழிலாளர்கள், சுமைதூக்கும் பணியாளர் இங்கு வருகின்றனர். கோயம்பேடு சந்தை சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் கண்காணிக்கப்படுகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது, மக்கள் அதிகம் கூடும் இடமான கோயம்பேடு சந்தை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. விவசாயிகளின் விளைபொருள் தேக்கம் அடைவதோடு, காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.


ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் கோயம்பேட்டில் சலூன் கடை நடத்துபவர், கொத்தமல்லி வியாபாரி, பூ வியாபாரிகள் ஏழு பேர் என அடுத்தடுத்து தொற்று உறுதிபடுத்தப்பட்டது. இதனிடையே, ஏப்ரல் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நான்கு நாள் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதனால், ஏப்ரல் 25ம் தேதி பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்களை வாங்க குவிந்தனர்.


தனிநபர் இடைவெளி என்பது அப்போது முற்றிலும் கடைபிடிக்கவில்லை. தொடர்ந்து, கோயம்பேட்டில் இருந்த மற்ற வியாபாரிகளுக்கு தொற்று பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. 28-ஆம் தேதி முதல் கோயம்பேட்டில் சில்லறை விற்பனைக்கு தடை வித்திக்கப்பட்டது. அடுத்தடுத்து வியாபாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மே 5ம் தேதி முதல் மூடப்பட்டது.கோயம்பேடு சந்தையிலிருந்து உருவான நோய்ப்பரவல் தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு பரவி உள்ளது. இதில், சென்னை, கடலூர், அரியலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது.


சென்னையில் ஏப்ரல் 30ம் தேதி வரை 906 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். கடந்த 8 நாட்களில் மட்டும் புதிதாக 2,137 பேர் சென்னையில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஒட்டுமொத்த தமிழகத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும் 3847 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் வட மாவட்டங்களில் புதிய தொற்றுகள் அதிகமாக கண்டறியப்படுகின்றன. அதற்கான முதன்மைக் காரணங்களில் குறிப்பிடத்தக்கது கோயம்பேடு பரவல்.


சென்னையில் கோயம்பேடு வியாபாரிகள், ஊழியர்கள் அவர்கள் குடும்பத்தினர், அங்கு பணியாற்றி அரசு ஊழியர்கள், காவலர்கள், மார்க்கெட்டுக்கு வந்து சென்ற பொதுமக்கள் மக்கள் என இதிவரை சுமார் 500 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு வந்து சென்றவர்கள் தாமாக முன்வந்து பரிசோதித்துக்கொள்வும், தனிமைப்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலூரில் ஏப்ரல் 30ம் தேதி வரை 27 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 8 நாட்களில் 384 பேருகும் கோயம்பேடு பரவலால் தொற்று ஏற்பட்டுள்ளது.


அரியலூரில் ஏப்ரல் 30-ம் தேதி வரை 6 பேர் மட்டுமே பாதித்திருந்தனர். கோயம்பேடு பரவலால் அதிகம் பாதிப்புக்குள்ளான இம்மாவட்டத்தில் கடந்த 8 நாளில் சுமார் 239 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்கள்.


மேலும், கோயம்பேட்டில் வேலை பார்த்துவிட்டு ஊர் திரும்பிய 1000-க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் தனிமைப்படுத்துள்ளனர். விழுப்புரத்தில் கடந்த 8 நாட்களில் மட்டும் 176 பேர் கோயம்பேடு பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் 60-க்கும் மேற்பட்டோருக்கு கோயம்பேடு வந்து சென்றதால் தொற்று ஏற்பட்டுள்ளது.


அதேபோல் திருவள்ளூரில் 180 பேரும், காஞ்சிபுரத்தில் 44 பேரும், செங்கல்பட்டில் 32 பேரும், தஞ்சாவூரில் 5 பேரும், நீலகிரியில் 4 பேரும், புதுக்கோட்டையில் 3 பேரும், தர்மபுரியில் 3 பேரும், திருப்பூரில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்